அழகே அழகு

உங்கள் முகம் மாசு மருவற்ற தங்கம் போல ஜொலி ஜொலிக்க!

ரிஷி

சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வது வழக்கம். ஆனால், வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் சுலபமாக ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். இதன் மூலம் முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். இயற்கை முறையில் ப்ளீச்சிங் செய்வதால் நிறமும் சற்று அதிகரித்துக் காணப்படும். 

காய்ச்சாத பாலை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

உருளைக்கிழங்கை விழுது போன்று அரைத்து தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சிங் ஆகும். 

ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் பளிச்சிடும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு தேக்கரண்டி பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும். முகமும் பளபளப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT