கோப்புப்படம் 
அழகே அழகு

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

ஆலிவ் எண்ணெயில் சில வகைகள் இருப்பினும், அமிலத்தன்மை குறைவாக உள்ள விர்ஜின் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது நல்லது. 

தினமணி

ஆலிவ் எண்ணெயில் சில வகைகள் இருப்பினும், அமிலத்தன்மை குறைவாக உள்ள விர்ஜின் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது நல்லது. 

சமையலுக்கு மட்டுமின்றி ஆலிவ் எண்ணெயை சரும அழகுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். 

சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது. 

தினமும் ஆலிவ் எண்ணெயைத் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் சருமம் வழவழப்பாக இருக்கும். குளிக்கும் நீரில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் கலந்து குளிக்கலாம். 

அதேபோன்று ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் செல்கள் புத்துணர்ச்சி அடையும். சருமம் பொலிவு பெறும். 

கண்களைச் சுற்றியுள்ள கரு வளையங்கள், சுருக்கங்களை போக்குவதற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். 

தலைமுடி வளர்ச்சிக்கும் ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. தலையில் ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். இதனால் கூந்தல் கருமையாக அடர்த்தியாக வளரும். 

இதுதவிர, ஆலிவ் எண்ணெய் முகப்பருக்களை மறைய வைக்கிறது. முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க பயன்படுகிறது. 

ஒட்டுமொத்த சரும அழகுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் ஆலிவ் எண்ணெயை அனைத்து வயதினரும் தொடர்ந்து பயன்படுத்தலாம். சரும ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் தங்கள் மருத்துவரின் ஒப்புதலுடன் பயன்படுத்துங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT