ரசிக்க... ருசிக்க...

கேரட் நட்ஸ் மில்க்ஷேக்!

கேரட் மற்றும் நட்ஸ் இரண்டுமே விட்டமின்களும் மினரல்களும் நிறைந்த சத்துள்ள உணவுகள். கண்கள் மற்றும் கேசம் பொலிவுற இவை உதவும்.

கார்த்திகா வாசுதேவன்

தேவையான பொருட்கள்:
கேரட்: 2
நட்ஸ்: 6 முந்திரிப்பருப்பு +  8 பாதாம்
மில்க்: 4 கப்ஸ்
சர்க்கரை: தேவையான அளவு

செய்முறை:

கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும், நட்ஸ் ( முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் இரண்டையும் தோல் நீக்கி நன்கு கழுவி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து  மிக்சியில் மையாக அரைத்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக்கிய கேரட்டை பால் கொதித்து வரும் போது அதில் சேர்த்து இரண்டாம் கொதி வந்ததும் இறக்கி பாலோடு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனோடு முன்பே அரைத்து வைத்த நட்ஸ் கலவை மற்றும் சர்க்கரை சேர்த்து  நன்கு கலக்கி ஆற விடவும். ஆறியதும்  ஒரு மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்துப் பின் எடுத்துக் பரிமாறலாம். கேரட் நட்ஸ் மில்க் ஷேக் ரெடி. 
பலன்:
கேரட் மற்றும் நட்ஸ் இரண்டுமே விட்டமின்களும் மினரல்களும் நிறைந்த சத்துள்ள உணவுகள். கண்கள் மற்றும் கேசம் பொலிவுற இவை உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT