முகப்பு
செய்திகள்

ஹாரிபாட்டர் வரிசை திரைப்படங்களை இவர் ஏன் வெறுக்கிறார்? 

உண்மையில் ‘ஹாரிபாட்டர்’ படத்தில் காட்டப் பட்டது போல அந்தப் பள்ளிகள் அனைத்தும் ரொமாண்டிக் ஆன, சாகஸமான இடங்களெல்லாம் இல்லை. அங்கே சென்று பயில்வதென்பது நரகத்தில் வசிப்பதற்கு ஈடானது.

Updated On : 1 டிசம்பர், 2016 at 5:46 PM
பகிர்:

பிளாக் மேஜிக் மற்றும் மாந்திரீகம்  கற்றுத் தரும் பள்ளிகளும், கல்லூரிகளும் இந்தியாவில் இல்லை. ஆனால் இப்படியான பள்ளியைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாரிபாட்டர் ஆங்கிலத் திரைப்படம் பிரமாண்ட  வரவேற்பைப் பெற்று இந்தியாவிலும் அனைத்து மொழிகளிலும் ஏகோபித்த வெற்றி பெற்றது.

சில வருடங்களுக்கு முன் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில்‘கிங்’ என்றொரு திரைப்படம் வெளிவந்தது. கதைப்படி நாயகன் பிளாக் மேஜிக்கில் பட்டம் பெற்றவனாக காட்டப்படுவான். அப்போது தான் இந்தியாவில் பலருக்குத் தெரிந்தது, அமெரிக்காவில் இப்படி ஒரு கல்விமுறை இருப்பது! படம் வெளியான புதிதில் இதற்கெல்லாமா பள்ளி வைத்து நடத்துகிறார்கள்? எந்த விதமான பாடத்திட்டத்தை பின்பற்றுவார்களோ என்று வினோதமாகத் தோன்றியது.

ஆனால் அந்த சமயத்தில் ‘ஹாரி பாட்டர்’ சீரிஸ் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து இந்தியாவிலும் அது ஓஹோவென வரவேற்பைப் பெற்ற போது இந்திய மாணவர்களில் பலருக்கும் அப்படியான ஒரு பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும் என்ற ஆசையைக் கிளறி விட்டது அந்தப் படம். உண்மையில் ‘ஹாரிபாட்டர்’ படத்தில் காட்டப் பட்டது போல அந்தப் பள்ளிகள் அனைத்தும் ரொமாண்டிக் ஆன, சாகஸமான இடங்களெல்லாம் இல்லை. அங்கே சென்று பயில்வதென்பது நரகத்தில் வசிப்பதற்கு ஈடானது என்று சமீபத்தில் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் ஒரு ஹாலிவுட் நடிகை. அவர் வேறு யாருமல்ல ஆங்கிலப் படரசிகர்களுக்கெல்லாம் பரிச்சயமான ‘டாக்டர் ஸ்டிரேஞ்ச்’ படப் புகழ் டில்டா ஸ்விண்டன் தான். 

Advertisement

‘உண்மையில் மாந்திரீகம் அல்லது பிளாக் மேஜிக் கற்றுத் தரும் இத்தகைய பள்ளிகள் மாணவர்களின் இயல்பு வாழ்க்கையை தொலைக்கச் செய்கிறது. மாணவப் பருவத்தில் பிள்ளைகள் தங்களது பெற்றோருடன் தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் மிகவும் முக்கியமானது. அவற்றை இழந்து விட்டு பிளாக் மேஜிக் கற்றுக் கொள்ள உறைவிடப் பள்ளிகளில் தங்குவது எல்லாம் வேண்டாத வேலை. உண்மையில் படத்தில் காட்டப்படுவது போல அந்தப் பள்ளிகள் அத்தனை சாகசமான, அல்லது ரொமாண்டிக்கான அனுபவங்களை எல்லாம் தரப் போவதே இல்லை. நரகமயமான அனுபவங்களையே தருவதாக இருக்கின்றன. அதனால் தான் அப்படியான பள்ளிகளை நான் வெறுக்கிறேன். அதை மையமாக வைத்து வெளிவந்த ஹாரி பாட்டர் வரிசை படங்களையும் வெறுக்கிறேன்’

என டில்டா ஸ்விண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.