செய்திகள்

சென்னையில் மேற்கு வங்க சேலைகள் கண்காட்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநில கைத்தறி நெசவாளர்கள் சார்பில் "ரங்க் மஹால்' பருத்தி சேலைகள் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Nandini Chandrashekar

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநில கைத்தறி நெசவாளர்கள் சார்பில் "ரங்க் மஹால்' பருத்தி சேலைகள் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநில அரசின் கைத்தறித் துறையில் பதிவுபெற்ற "ரங்க் மஹால்' என்ற அமைப்பு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள சிறு அரங்கில், வங்க மாநில காட்டன் சேலைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த விற்பனைக் கண்காட்சி வரும் 24 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதில், மேறகு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காட்டன் சேலைகள், ஆர்கானிக் சேலைகள், கைத்தறி ஆடைகள், விலங்குகள், பழவகைகள் பார்டர் அமைந்த சேலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்தக் கண்காட்சி தொடர்பாக ரங்க் மஹால் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சர்மிஸ்தா தாஸ் பிஸ்வாஸ் கூறியபோது, "இந்தக் கண்காட்சியில் 250 -க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஜல்சூரிஸ் சேலைகள், ஜம்தானிஸ் சேலைகள், இயற்கை சாய கைத்தறி சேலைகள் உள்ளிட்ட 560 ரகமான சேலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ.700 முதல் ரூ.10 ஆயிரம் வரையாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சுய உதவிக்குழுவின் கோரிக்கையை முதல்வர் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்: துணை முதல்வர் உதயநிதி

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

SCROLL FOR NEXT