செய்திகள்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போல ஸ்டார் பிளஸில் ‘தில் ஹை ஹிந்துஸ்தானி’ பாட்டுப்போட்டிக்கு நடுவர் யார் தெரியுமா?

இந்தப் போட்டிக்கான குரல் தேர்வுகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் இந்தியாவிலிருக்கும் பிரதான நகரங்கள் சிலவற்றிலும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படுமாம்.

கார்த்திகா வாசுதேவன்

விரைவில் கரன் ஜோகரும், ராப் பாடகர் பாட்ஷாவும் இணைந்து ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பரப்பப் படவிருக்கும் ’தில் ஹை ஹிந்துஸ்தானி’ பாட்டுப் போட்டிக்கு நடுவர்களாக பங்கேற்கவிருக்கிறார்களாம்.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமே பாலிவுட் இசையைப் புதுப்பித்து புத்தம் புதிய இளம் பாடகர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது தானாம். இந்தப் போட்டிக்கான குரல் தேர்வுகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் இந்தியாவிலிருக்கும் பிரதான நகரங்கள் சிலவற்றிலும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படுமாம். வேறு வேறு ’த்வனிகளில்’ பாடக்கூடிய திறமை பெற்ற தனித்துவமான குரல்களை அடையாளம் காண்பதே இப்போட்டிக்கான முக்கிய குறிக்கோள். 
முன்னதாக தனது  இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பட்சன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும்‘ஏ தில் ஹை முஷ்கில்’ பட வெளியீட்டுக்காக கரன் காத்திருக்கிறார். படம் வெளியாகி அது தொடர்பான வேலைகள் முடிவுற்றதும் ஸ்டார் பிளஸின் இசைச் சங்கமத்தில் நடுவர் மகுடம் சூடி பாட்ஷாவுடன் இணையவிருக்கிறார் கரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT