செய்திகள்

அஜித்துக்கு கார் ரேஸ், ஆர்யாவுக்கு சைக்கிளிங்... பாகுபலி  பிரபாஸுக்கு?

ஃபிட்னஸுக்காக மட்டும் அல்ல பிரபாஸ் தனது நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பாகவும் கருதி வாலிபால் விளையாட்டின் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறார்.

சரோஜினி

நடிகர் பிரபாஸ் ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் சொந்தமாக வாலிபால் கோர்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். நடிகர்கள் ஃபிட்னஸுக்காக ஜிம்மே கதி என்று கிடப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பிரபாஸ் ஃபிட்னஸ் விசயத்தில் ஜிம்மை விட அவுட் டோர் கேமான வாலிபாலை அதிகம் நம்புகிறாராம். வாலிபால் விளையாடும் போது உடலில் உள்ள தசைகள் அனைத்திற்கும் வேலை உண்டு. வாலிபால் விளையாடுவதன் மூலம் முழு உடலுக்கும் தேவையான பயிற்சிகளை நம்மால் வொர்க் அவுட் செய்ய முடியும் என்கிறார் பிரபாஸ்.

ஃபிட்னஸுக்காக மட்டும் அல்ல பிரபாஸ் தனது நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பாகவும் கருதி வாலிபால் விளையாட்டின் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறார். இப்படி நண்பர்களோடு தொடர்ந்து விளையாடத் தொடங்கி தற்போது நண்பர்கள் ஒன்றாகக் கூடினால் கண்டிப்பாக வாலிபால் ஆடியே தீருவது என அது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு போல ஆகி விட்டதாம். பாகுபலி 1 & 2 இரண்டு திரைப்படங்களுக்காகவும் உடல் எடையைக் கூட்டுவதும், குறைப்பதுமாக இருந்த பிரபாஸ் ஷூட்டிங் முடிந்து தற்போது பாகுபலி 2 பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT