செய்திகள்

நிச்சயதார்த்தத்திற்கு மூன்றே நாட்கள் இருக்கையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண், பெற்றோர்!

நிச்சயதார்த்தத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், விழாவிற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் கூட்டாக நிகழ்ந்த  இந்த தற்கொலை ஏன்?

கார்த்திகா வாசுதேவன்

ஈரோடு சின்னியம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா(31) தனியார் வங்கி மேலாளர். கடந்த வியாழன் அன்று இரவு கிருத்திகாவும், அவரது பெற்றோர் மனோகரன்(60), ராதாமணி(55) மூவரும் சின்னியம்பாளையத்தில் தங்களது வீட்டில் கூட்டாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுளனர். மறுநாள் வெள்ளி அதிகாலையில் வீட்டுக்கு வழக்கமாக பால் சப்ளை செய்ய வரும் பால்காரர் நீண்ட நேரமாகக் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் அடிப்படையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் கதவைத் திறக்க முயன்று முடியாத நிலையில் கதவி உடைத்து உள்ளே நுழைந்த போது மூவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தி தெரிய வந்திருக்கிறது.

நிச்சயதார்த்தம் நடைபெற மூன்றே நாட்கள் இருக்கையில் நிகழ்ந்த இந்த தற்கொலை விவகாரம் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் காவல்துறைக்கு மூன்று கடிதங்களை விட்டுச் சென்றுள்ளனர். அதில் ஒரு கடிதத்தில் மிகுந்த மன உளைச்சல் மற்றும் குழப்பத்தின் காரணமாகவே மூவரும் தற்கொலை முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது இறுதிச் சடங்கிற்குத் தேவையான தொகை முழுவதையும் ஒரு கைப்பையில் வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனராம்.

இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிச்சயதார்த்தத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், விழாவிற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் கூட்டாக நிகழ்ந்த  இந்த தற்கொலை ஏன்? எனும் கேள்வி சின்னியம்பாளையத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

சுதந்திர நாளையொட்டி இந்தியக் கடற்படை சார்பில் புதுச்சேரியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

SCROLL FOR NEXT