செய்திகள்

பெண்ணின் நட்புகள் கணவருக்குப் பிடிக்கவில்லை எனில் துண்டிக்கப் படவேண்டியவை தானா?

தங்களது நட்பினிடையே அஜய் தேவ்கன் வந்த பின் தான் சிறு சிறு விரிசல்கள் வரத் தொடங்கி விட்டன எனப் பொருள் படும்படி அவர் தனது வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.

கார்த்திகா வாசுதேவன்

பாலிவுட்டில் இப்போது சமீபத்திய பரபரப்புச் செய்தி என்ன தெரியுமா? காஜோல், கரண் ஜோஹர் நட்பு பிரிவுச் செய்தி தான். கிட்டத்தட்ட 25 வருட கால நெருங்கிய நட்பு. கரண் ஜோஹரின் அனைத்துப் படங்களிலும், பாடல் காட்சிகளில் கண்டிப்பாக கெஸ்ட் அப்பியரன்ஸில் காஜோல்  2 நிமிடங்களேனும் தோன்றுவார். இதை அவரது சமீபத்திய இரண்டு திரைப்படங்களான ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன், கபி அல்விதா நா கெஹனா’ எனும் திரைப்படங்களிலும் காணலாம். அந்த அளவுக்கு காஜோல் கரணின் அதிர்ஷ்ட தேவதையாக கருதப்பட்டார். ஆனால் திடீரென்று இரண்டு பேரின் நட்புக்கு இடையில் என்ன வந்தது என்றால், எல்லாம் திருமண உறவு தான் என்கிறது பாலிவுட்.

காஜோலின் காதல் கணவர் அஜய் தேவ்கன். இதுவரையில் கரண் மற்றும் காஜோல் நட்பில் குறுக்கே வரவில்லை. அதுவரை நட்பு சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது கரண் தயாரிப்பில் இன்னும் வெளியிடப் படாத அவரது வாழ்க்கை கதையான ‘தி அன்ஸுட்டபிள் பாய்’ ல் கரண் மிகத் தெளிவாக ஒரு விசயத்தைப் பதிவு செய்து விட்டார். அதாவது 25 வருடங்களாக பிரிக்க முடியாத அளவுக்கு, மிகச் சரியான புரிதலுடனிருந்த தங்களது நட்பினிடையே அஜய் தேவ்கன் வந்த பின் தான் சிறு சிறு விரிசல்கள் வரத் தொடங்கி விட்டன எனப் பொருள் படும்படி அவர் தனது வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.

இதை காஜோலின் கணவர் அஜய் தேவ்கன் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து  அஜயின் சமீபத்திய திரைப்படம் வெளியான அன்றே கரண் தனது ‘ ஏ தில் கை முஷ்கில்’ படத்தையும் வெளியிட்டு தனது எரிச்சலை வெளிப்படுத்தினார்.

நடுவில் காஜோலுக்கும் கரணுக்குமிடையே ட்விட்டர் நிலைத்தகவல்கள் வழியாகவும் நட்பில் பிரிவினை ஏற்படத் தோதான வகையில் உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

கடைசியாக ’தனது நட்புக்குத் தகுதியானவர் அல்ல காஜோல்’ எனும்படியாக நிலைத்தகவலிட்டு கரண் தனது 25 ஆண்டு கால நெருங்கிய நட்புக்கு குட்பை சொல்லி இருக்கிறார். ஆனாலும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கரணும், காஜோலும் விரைவில் மீண்டும் நட்பாகி விடுவார்கள் எனும் நம்பிக்கையும் இழையோடிக் கொண்டிருக்கிறது.

Image courtsy: bolywoodlife.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT