செய்திகள்

உபேரில் நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டை, பெண் பத்திரிகையாளருக்கு நியாயம் கிடைக்குமா?

RKV

மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் உபேர் ஷேர் வாடகை காரில் பயணம் செய்திருக்கிறார். ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பயணிக்கக் கூடிய அந்த வாகனத்தில் இவருடன் இணைந்து பயணித்த பெண்ணொருவர்... தான் அதிக தொகை கொடுத்தும் கடைசியாக இறக்கி விடப்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல் வாகன ஓட்டுனரிடம் சண்டையிட்டதோடு உபேரில் தன்னுடன் வந்து கொண்டிருந்த சக பயணியான பெண் பத்திரிகையாளரிடமும் மிக மோசமாக நிறவெறியைத் தூண்டும் வண்ணம் மிக ஆத்திரத்துடன் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சக பெண்பயணி ஆத்திரத்துடன் உஷ்னோதாவுடன் சண்டையிடுகையில் பின் சீட்டில் உதிர்ந்து கிடந்த உஷ்னோதாவின் தலைமுடி... (குடுமிப்பிடி சண்டையே தான்)

முற்றிலும் புதியவரான பெண்ணொருவர் தன்னை நிறவெறியோடு அணுகியதைக் கண்டு குழம்பிப் போன பெண் பத்திரிகையாளர் அந்தப் பெண்ணிடம் தாமதத்துக்கான காரணம் குறித்துப் பேசமுற்படுகையில் சற்றும் யோசிக்காமல் அவரது கூந்தலைப் பிடித்து இழுத்து அலங்கோலப்படுத்தி கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் அந்தப் பெண். இத்தனை விஷயங்கள் உபேரில் அரங்கேறிக் கொண்டிருந்த போதும் அதிலிருந்து மற்ற பயணிகளோ அல்லது உபேர் வாகன ஓட்டியோ இதைக் குறித்து  ஒரு வார்த்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதோடு... தான் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து காவல்துறையில் புகார் அளித்த போதும் கூட உபேர் நிர்வாகம் இதில் நியாயமாக நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில் இது குறித்து விளக்கமாகப் பதிவிட்டுள்ள உஷ்னோதா பால் எனும் அந்தப் பெண் பத்திரிகையாளர்,  ‘தங்களது வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காகக் கூட தெரிவிக்க விரும்பாத உபேர் வாடகைக் கார் நிறுவனத்தினர் அதற்கான காரணமாகக் கூறுவது, எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விவரங்களை அவர்களது அனுமதியின்றி வெளியாரிடம் தெரிவிக்க முடியாது என்கிறார்கள், பிறகு நான் யார்? நானும் நாளைக்கு இருமுறை அவர்களது வாகனத்தில் பயணிக்கும் பெண் தானே? எனக்கு நேர்ந்த அநீதிக்கு யார் பொறுப்பேற்பது? இதுவரை உபேரில் பயணிக்கையில் பயமின்றி பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நினைத்தது எனது முட்டாள்தனம்... இனி என்னால் அப்படி நம்ப முடியாது’ என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

உஷ்னோதா... தனது ட்விட்டர் தளத்தில் இத்தனை குமுறிய பின்பு உபேர் நிர்வாகம் அவருக்கு அளித்த சப்பையான பதில், 

தொடர்ந்து சில ஆண்டுகளாக உபேர் வாகனங்களை அலுவலகம் செல்லப் பயன்படுத்தி வரும் உஷ்னோதா போன்ற பெண்களுக்கு நிகழ்ந்த இத்தகைய சோகத்துக்கு உபேர் நிர்வாகம் சரியாகத்தான் நீதி செய்துள்ளதா? இனிமேலும் செய்யுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT