செய்திகள்

ஆணா? பெண்ணா? யார் மிகச் சிறந்த ஓட்டுநர்?

DIN


இந்தியாவில் மட்டுமல்ல.. உலகிலும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களில் 90 சதவீதம் பேர் ஆண்கள்தான். 99 சதவீத வாகன விபத்துகளை ஏற்படுத்துவதும் ஆண்கள்தான். 

ஆனால், சாலையில் மிகப்பெரிய விபத்துக் காரணியாக இருப்பது பெண்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாம். (பெண்கள் கோபப்படக் கூடாது..)

அதாவது, ஒரு ஆண் கார் ஓட்டுநர் செய்யும் விபத்துக்கு அந்த காருக்குள் இருக்கும் அல்லது வெளியே இருக்கும் பெண்ணால் ஏற்படும் கவனச் சிதறலும் காரணமாக அமைகிறது. (அதனாலதாங்க ஃபோன் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.)

ஜேம்ஸ் பாண்ட் சொல்லும் வசனத்தைப் போல இயன் ஃபிளேமிங் சொல்வதுதான் மிகவும் வியப்பாக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு பெண்ணும் வாகனத்தை இயக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார். ஆனால், ஒரு இணையுடன் பயணிக்கும் போது அவர்கள் அப்படி நடந்து கொள்வதில்லை. (உண்மைதானோ?!)

மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது, ஒரு பெண், தான் பேசும் போது, அதைக் கேட்கும் நபர் தன்னுடைய கண்ணைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைப்பார். ஒரு வேளை கார் ஓட்டும் நபருக்கு அருகே அதுபோன்ற பெண் ஒருவர் அமர்ந்து பேசிக் கொண்டு வந்தால்? 

ஒரேயடியா பெண்களைக் குத்தம் சொல்லிவிட முடியாது..

பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே வாகனத்தை இயக்குவார்கள். ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். விபத்தை ஏற்படுத்துவது, பிற வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் செய்வதெல்லாம் அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது.

அதே சமயம், ஆண்கள் ஒரு வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதும், குறுகிய சந்தில் நுழைவது, வேகமாகச் செல்லும் டிரக்கை ஓவர் டேக் செய்வது, தவறான இடத்தில் கட் அடித்துவிட்டு, திட்டுவது அல்லது திட்டு வாங்குவது எல்லாவற்றையுமே ஆண்கள் ரசிப்பார்கள்.

பெண்களுக்கு வாகனத்தை ஓட்டுவது மட்டுமே வேலையல்ல, அவர்களுக்கு வீடு, வாழ்க்கை, குழந்தை என பல விஷயங்கள் இருக்கிறது. சாலையில் வாகனத்தை இயக்கியதும், ஆண்கள் தங்கள் கவனத்தை சாலையில், அதுவும் மிக மோசமான சாலை என்றால், கூடுதல் கவனத்தை அங்கே செலுத்துவதும், பெண்களால் அது சில சமயங்களில் முடியாமல் போவதும் உண்மையாம்.

வாகனம் என்பது வெறும் வாகனம் மட்டுமே பெண்களுக்கு. ஆனால், ஆண்களுக்கோ அது தங்கள் பர்சனாலிடி மற்றும் பொருளாதார நிலையைக் காட்டும் கண்ணாடியாகவும் மாறி விடுகிறது. சாலையில் பயணிக்கும் போது தங்களது வாகனத்தை மற்றொரு வாகனம் கடந்து செல்வதைக் கூட ஜீரணிக்க முடியாத ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனவே.. சாலைகளில் யார் மிகச் சிறந்த ஓட்டுநர்களாக இருக்கிறார் என்பதை கிட்டத்தட்ட நீங்களே புரிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT