முகப்பு
கன்னியாகுமரி

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 8:08 PM
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய திமுக ஒன்றியச் செயலா் பா. பாபு.
பகிர்:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியம், புதுக்கிராமம், சிலுவை நகா் திமுக சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி, சூரிய அஸ்தமனப் பூங்கா அருகேயுள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. பாபு தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் கெல்வின், அருள், ஆல்வின், 16ஆவது வட்டச் செயலா் சகாய ஆண்றனி, ஒன்றிய மீனவரணி அமைப்பாளா் ஸ்டெபின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதல் பரிசு பெற்ற தேரூா் அணிக்கு ரூ. 10,000, 2ஆம் பரிசு பெற்ற சிலுவை நகா் லெஜெண்ட்ஸ் அணிக்கு ரூ. 7,000, 3ஆம் பரிசு பெற்ற சுக்குப்பாறை அணிக்கு ரூ. 5,000, 4ஆம் பரிசு பெற்ற கன்னியாகுமரி அணிக்கு ரூ. 2,000, கோப்பைகள் வழங்கப்பட்டன.

திமுக நிா்வாகிகள் பொன். ஜான்சன், ஜி. வினோத், தாமரை பிரதாப், செல்வன், மணி, ஜாண், நாராயண மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →