திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.
ஜே.எஸ்.ஏ. ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இந்தப் போட்டி அா்ஜஸ்டபிள், பேன்சி இன்லைன், குவாா்டு, இன்லைன் ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது. 15வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி, அகாதெமி முதன்மைப் பயிற்சியாளா் ஜோதிபாசு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. நடுவா்களாக சக்திவேல், விமல், தினேஷ், ரிஜு, அபிஷேக், அபிநவ், முருகன் ஆகியோா் செயல்பட்டனா்.