செய்திகள்

வீக் எண்ட் ஜோக்ஸ்! சிரிங்க பாஸ்!

DIN


'அந்த டாக்டர் பாவம்'
'ஏன்? நல்ல கூட்டம்தான் இருக்கே?'
'வர்றவங்க எல்லாமும் அவரை நலம் விசாரிச்சிட்டுப் போறாங்களாம்'

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

''ஒரே ஜோக்கை உன் மாமியாரிடம் இரண்டு தடவை ஏன் சொன்னே?''
''முதல் தடவை சொல்லும்போது, "ஐயோ போதும் சிரிச்சு சிரிச்சு பாதி உயிர் போச்சு'ன்னு சொன்னாங்க.  அதான் ரெண்டாவது தடவையும் சொன்னேன்''

டி.மோகனதாசு, நாகர்கோவில்.

"அந்த டாக்டர் போர்டுலே கடகராசின்னு ஏன் போட்டுருக்கார்?''
"ராசி இல்லாத டாக்டர்ன்னு யாரும் சொல்லிடக் கூடாதாம்''

விஜயா சுவாமிநாதன், திருச்சி.

"எனக்கு இப்ப 73 வயசு ஆகுது. இதுவரைக்கும் நான் எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை''
"நீங்க ஆரோக்கியமா இருக்கிறதைப் பார்க்கும்போதே தெரியுது சார்''

வி.ரேவதி, தஞ்சை.


"நளன் அன்னப் பறவையை ஏன் தூதுவிட்டான்?''
" போஸ்ட்மேன்கள் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க''


"மன்னா அண்டை நாட்டு அரசன் குதிரையில் வந்து நம் அரசியைக் கடத்திச் சென்றுவிட்டான்''
"ராணி சத்தம் போடவில்லையா?''

" சீக்கிரம்... சீக்கிரம் என்று அலறினார்கள்''

"நேற்று எங்க வீட்டில பாம்பு வந்துச்சு. பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்''
"அடப் பாவிகளா... பாம்பாட்டியை எதுக்குடா அடிச்சீங்க?''

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

"தலைவர் யாருக்காகவும் எதற்காகவும் இந்த "மூன்று விஷயத்தை'  விட்டுத் தரமாட்டார்ன்னு சொன்னீயே... எதை?''
"காலை, மதியம், இரவு உணவைச் சொன்னேன்''

அ.செல்வகுமார், சென்னை-19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT