முகப்பு
செய்திகள்

இதயக் கோளாறுகளுக்கு யோகா சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்

இதயக் கோளாறுகளுக்கு யோகா சிறந்த மருந்து என ஆய்வுயொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 24 ஆகஸ்ட், 2020 at 5:19 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:41 PM

இதயக் கோளாறுகளுக்கு யோகா சிறந்த மருந்து என ஆய்வுயொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈ.எஸ்.சி காங்கிரஸ் 2020 என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், இதயக் கோளாறுகளுக்கும், யோகாவிற்கும் இடையேயான தொடர்பு குறித்து கண்டறியப்பட்டது. அதன்படி, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு யோகா பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.  

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்பது பொதுவான இதயக் கோளாறு. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள நடுத்தர வயதினரில் நால்வரில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதாகவும், 20-30 சதவிகிதத்தினரிடம் இது பக்கவாதத்தையும், மேலும், ஆண்களில் 1.5 மடங்கு மற்றும் பெண்களில் இரண்டு மடங்கு கூடுதலாக உயிரிழக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வித இதயக்கோளாறு தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் 10-40 சதவிகிதம் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். படபடப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், சோர்வு, மார்பு வலி, தலைச்சுற்றல் ஆகியவை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனின் அறிகுறிகளாகும்.

'ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தும். இதனால் நோயாளிகள் கவலைப்படுவதோடு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான சூழ்நிலை அற்றுப்போகிறார்கள்' என  ஜெய்ப்பூரில் உள்ள எச்.ஜி எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் ஆய்வு ஆசிரியர் டாக்டர் நரேஷ் சென் கூறினார்.

2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 538 நோயாளிகள் ஆய்வுக்காக, முதல் 12 வாரங்கள் யோகா செய்யாமலும், அடுத்த 16 வாரங்கள் தினமும் 30 நிமிடங்கள் யோகா பயிற்சியினை செய்தனர். இதில் குறிப்பாக நோயாளிகளுக்கு சுவாசப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இரண்டு கட்ட ஆய்வுகளிலும் அவர்களது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சிலரது இதயத்துடிப்புகளின் அளவை அறிய கருவிகளும் பொருத்தப்பட்டன. 

இதில், யோகா செய்த 16 வார காலத்தில் நோயாளிகளின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தவர்களுக்கு இதயத் துடிப்பு சரியானதுடன் மன அழுத்தமும் குறைந்தது தெரிய வந்தது. யோகா பயிற்சிக்குப் பிறகு நோயாளிகளின் சராசரி ரத்த அழுத்தம் 11/6 mmHg அளவு குறைந்தது.

உடல் மற்றும் மனநிலை தொடர்பான பிரச்னைகளில் யோகா குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளரும், மருத்துவருமான டாக்டர் சென் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.