முகப்பு
செய்திகள்

தமிழில் வெளியாகும் வாழ - 2!

வாழ - 2 திரைப்படம் தமிழ் டப்பிங் செய்யப்படுகிறது...

Updated On : 13 ஏப்ரல் 2026, 1:27 pm IST
பகிர்:

மலையாளத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டரான வாழ - 2 திரைப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற படம் வாழ. இப்படத்தை ஆனந்த் மேனன் இயக்கியிருந்தார். குறைவான பட்ஜெட்டில் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து, தற்போது இயக்குநர் விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ். ஏ இயக்கத்தில் வாழ - 2 ஏப். 2 அன்று வெளியானது.

பள்ளிகால கதையாக உருவான இது பலரிடமும் நகைச்சுவை, நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. வசூலாகவும் ரூ. 110 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதனால், விரைவிலேயே தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

அண்மை காலமாக மலையாள சினிமா வணிக ரீதியாகவும் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்தியளவில் கவனிக்க வைத்துள்ளது.

summary

vaazha - 2 movie tamil dubbing version soon in theatres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.