முகப்பு
செய்திகள்

58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்த சென்னை சிறுமி

58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்த சென்னை சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ
பகிர்:

58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

சென்னையைச் சேர்ந்த கலைமகள் என்பவரின் மகள் எஸ்.என்.லட்சுமி சாய் ஸ்ரீ. கரோனா  காலத்தில் வீட்டிலிருந்த நிலையில் சமையலில் ஆர்வம் ஏற்பட்டு தாயின் உதவியுடன் சமையல் கற்றுக்கொண்டுள்ளார். அவரது ஆர்வத்தைப் பார்த்து பெற்றோர் இதனை உலக சாதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

லட்சுமி சாய் ஸ்ரீ 58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து கேரள சிறுமியின் சாதனையை முறியடித்ததுடன் யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறார். 

நான் என் தாயிடமிருந்து சமையல் கற்றுக்கொண்டேன். இந்த சாதனை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் சாய் ஸ்ரீ தெரிவித்தார். 

சாய் ஸ்ரீயின் தந்தை, தனது மகளின் ஆர்வத்தை சாதனையாக்க முயற்சித்தார். கேரளத்தைச் சேர்ந்த சான்வி என்ற 10 வயது சிறுமி சுமார் 30 உணவுகளை சமைத்தது தான் சாதனையாக இருந்ததை தெரிந்துகொண்டு அதனை முறியடிக்கும் விதமாக தன் மகளின் சாதனைக்கு உதவிபுரிந்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →