இந்த நூற்றாண்டின் இன்றைய தேதி (02.02.2020) மிகவும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ள ஆச்சரியத்துக்குரியதாகும்.
முன்னதாக, சுமார் 909 ஆண்டுகளுக்கு முன் 11.11.1111 என்ற தேதி அமைந்துள்ளது. அதேபோன்று இன்றிலிருந்து அடுத்த 101 ஆண்டுகளுக்குப் பிறகு 12.12.2121 என்ற தேதி அமையவிருக்கிறது.
இந்த நிலையில், 2ஆம் எண்ணுக்கு அடுத்தபடியாக எதிர்காலத்தில் 3ஆம் எண் இடம்பெறும் விதமாக 03.03.3030 என்ற தேதியும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை ஆங்கிலத்தில் பேலிண்ட்ரோம் என்று வகைப்படுத்துகின்றனர். அதாவது ஒரு எழுத்து, எண் உள்ளிட்டவற்றின் தொடரில் ஒரு சொல்லாகவோ, சொற்றொடராகவோ அல்லது எண்களின் குவியலாகவோ முதல் மற்றும் கடைசி வரிசை முதல் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஒரே மாதிரியாக இடம்பெறுவது ஆகும்.
தமிழில் ''விகடகவி'' என்ற சொல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.