செய்திகள்

முகப்பரு நீங்க இதைச் செய்தால் போதுமானது!

முகப்பருவை நீக்க சிறிதளவு கொதிக்கும் தண்ணீரில் யூகலிப்டஸ், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு ஆவி பிடிப்பதே போதுமானது.

DIN


காற்றில் உள்ள மாசுக்கள் சருமத்தில் படிவதாலும், முகத்தில் அழுக்கு சேருவதாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இந்த முகப்பருக்களை விரட்ட எளிய வழி ஒன்று இருக்கிறது. இதற்காக நீங்கள் பெரிதாக செலவு செய்ய வேண்டியதும் இல்லை.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை கொதிக்க வைத்து அதில் துளசி இலை, யூகலிப்டஸ், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு ஆவி பிடிப்பதே போதுமானது. ஆவி முழுவதும் முகத்தில் படும்படி, கனத்த துண்டு வைத்து மூடிக்கொண்டு, 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும். முகப்பரு உள்ளவர்கள் மேலும் சிறிது நேரம் பிடிக்கலாம். ஆவி பிடித்த பின்னர், சுத்தமான துணியில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தனம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிய பின்னர் துடைக்கலாம்.

ஆவி பிடிக்கும்போது முகத்தில் உள்ள துவாரங்கள் விரிந்து, அழுக்குகள் எளிதாக வெளியேறிவிடும். ஓரிரு நாட்களிலேயே முகப்பரு மறைந்து விடும். மேலும், சருமத்தை அழகாக, இளைமையுடன் வைத்துக்கொள்ள வாரத்திற்கு ஒருமுறை ஆவி பிடிப்பது சிறந்தது. இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால்  சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!

ஹிமாசல், பஞ்சாப் வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT