முகப்பு
செய்திகள்

மாணவர்களின் உயிரைப் பறிக்கும் 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்'; பெற்றோர்கள் கவலை

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் மாணவர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Updated On : 18 பிப்ரவரி, 2020 at 4:30 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:24 PM

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஒருவருக்கொருவர் சேலஞ்சுகள்  விடப்படுவது வழக்கம். இதில் கிகி சேலஞ்ச் போன்ற ஆபத்து நிறைந்தவையும் அடங்கும், 

அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளங்களில் 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்' (Skull-breaker challenge) என்ற ஒரு ஆபத்தான விளையாட்டு பரவி வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரைப் பறிக்கக் கூடிய இந்த விளையாட்டை செய்து மாணவர்கள் டிக்டாக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

அதன்படி, மூன்று பேர் வரிசையாக நிற்க வேண்டும். ஓரத்தில் உள்ள இருவரும் முதலில் எகிறி குதிப்பர். பின்னர் நடுவில் உள்ளவர் குதிப்பார். நடுவில் உள்ளவர் குதிக்கும்போது ஓரத்தில் நிற்பவர் இருவரும் சேர்ந்து காலால் அவரை தடுத்து கீழே விழ வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நடுவில் நிற்பவர் பின்னோக்கி விழுகிறார். இந்த விளையாட்டில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சவாலில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் என்றும் மாணவர்கள் இதனை கைவிட வேண்டும் என்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.