செய்திகள்

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவரா நீங்கள்..?

DIN

செல்லப்பிராணிகள் வளர்ப்பது குறித்த அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை வெளிப்படுத்துகிறது ஓர் ஆய்வு. 

தற்போது செல்லப்பிராணிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அந்த வகையில் வீட்டில் ஒரு நபராக முக்கியத்துவம் கொடுத்து செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.  

இந்நிலையில், செல்லப்பிராணிகள் வைத்திருப்பதனால் மனிதனில் உண்டாகும் மாற்றங்கள் குறித்த ஒரு ஆய்வினை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற அறிவியல் பூர்வமான உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் மூலமாக நம் வாழ்வில் ஓர் அன்பு வட்டத்தை உருவாக்க முடியும் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், இந்த ஆய்வின்படி, தங்களது தனிமையைப் போக்கவே செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக மேற்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர், உளவியலாளர் ஹரோல்ட் ஹெர்சாக் கூறுகிறார். இவர் மனித-விலங்கு இடையேயான தொடர்பை நீண்ட காலமாக ஆய்வு செய்தவர்.

முக்கியமான மன அழுத்தத்தினால் ஆஸ்துமா, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இரைப்பை புண்கள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள் என்று கூறுகிறார். 

வயதானவர்கள், தங்கள் பிள்ளைகள் அருகில் இல்லாத சமயத்தில் அவர்கள் மூலம் கிடைக்கும் அன்பை செல்லப்பிராணிகள் வாயிலாக காண்கின்றனர். செல்லப்பிராணிகள் மூலமாகவே தனிமை விரும்பிகளின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஒட்டுமொத்தமாக செல்லப்பிராணிகள் வளர்ப்பத்து உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கும், செல்லப்பிராணிகள் இல்லாதவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT