செய்திகள்

உடல் எடையை அதிகரிக்க...

DIN

உடல் எடையைக் குறைக்கப் போராடுபவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்கவும் பலரும் முயற்சித்து வருகின்றனர். 

உணவு முறைகளை மாற்றுவதன் மூலமாகவும் சில உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலமாக உடல் எடையை அதிகரிக்க முடியும். 

பழங்களில் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கும். எனவே, காலை உணவுடன் ஒரு வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம். குறிப்பாக நேந்திரம் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். 

உடல் இளைத்தவர்களுக்கு 'எள்' ஒரு சிறந்த உணவு. உணவில் 'எள்'ளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். எள் துவையல் அல்லது எள் சேர்த்த உணவுகளை சாப்பிடலாம். 

நட்ஸ் வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக  முந்தி, உலர் திராட்சை, ஊற வைத்த பாதாம் பருப்புகளை எடுத்துக்கொள்ளலாம். 

அனைத்து வகையான பழங்களை சாப்பிடலாம். 

மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சீஸ் சேர்த்துக்கொள்ளலாம். 

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு எடுத்துக்கொள்ளலாம். மற்ற கிழங்கு வகைகளையும் சாப்பிடவும். 

பன்னீர், தேங்காய் பால், இனிப்பான பிரெட், பால், ஃபுருட் சாலட் சாப்பிடலாம். பசு வெண்ணெய்/நெய் உடல் எடையை விரைவாக அதிகரிக்க உதவும். 

50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொண்டு அதை நன்கு வேக வைத்து அதோடு தேவைக்கு ஏற்ப நெய் மற்றும் வெள்ளம் சேர்த்து சாப்பிடலாம். 

தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். 

உணவில் தினமும் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT