பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தன்னுடைய அழகின் ரகசியம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளில் மிகவும் பிரபலமான மாதுரி தீக்ஷித், தன்னுடைய 58 வயதிலும் அழகைப் பேணி வருகிறார். அவரது நடிப்பு மட்டுமின்றி அவருடைய அழகுக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர் தன்னுடைய அழகு பராமரிப்புக்கு தான் எந்த க்ரீம்களையும் சீரம்களையும் பயன்படுத்துவதில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
"நாம் நம் சருமத்திற்கு வெளியே எந்த அளவுக்கு பொருள்களை பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமல்ல, மாறாக நேர்மறை எண்ணங்கள், அமைதிதான் மிகவும் முக்கியம். அதுவே உங்களுடைய வாழ்க்கைக்கும் உங்களுடைய உடலுக்கும் அழகு சேர்க்கும். அது உடல் உள்ளிருந்து வர வேண்டியது. சருமத்திற்கு வெளியே நீங்கள் என்ன செய்தாலும் ஒரு பலனும் இல்லை.
என்னுடைய சரும அழகுக்குக் காரணம் என்னுடைய நேர்மறை எண்ணங்கள்தான். எதைப்பற்றியும் நான் எதிர்மறையாக நினைப்பதில்லை. நான் மக்களைச் சந்திக்க விரும்புகிறேன், மக்களிடம் பேச விரும்புகிறேன், அவர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் நானாக இருக்கிறேன், என்னை எதுவும் தொந்தரவு செய்வதில்லை, நான் எளிமையாக இருக்கிறேன். அனைத்தையும் நேர்மறையாகவே சிந்திக்கிறேன்.
மேலும் சில நேரங்களில் நான் தியானம் செய்கிறேன். அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். அதுவே எனக்கு நேர்மறை எண்ணங்களைத் தருகிறது என்று நினைக்கிறன். எனக்கு தோன்றும்போது நான் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கிறேன்.
அழகு சாதனப் பொருள்கள் சரும அழகுக்கு உதவலாம், ஆனால் உண்மையான அழகு என்பது அமைதியான எண்ணங்களும் அன்பான உள்ளமும் எளிமையான வாழ்க்கையுமே ஆகும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | வயிறு உப்புசமாக இருக்கிறதா? சரிசெய்யும் வழிகள் இதோ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.