கோப்புப்படம் IANS
செய்திகள்

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? - நம்பிக்கையும் உண்மையும்

மாரடைப்பு பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு டாக்டர் அனீஸ் தாஜுதீன் பதில்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வராதா? பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாமா? நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறியா?

இதய நோய்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் இதய நோய் நிபுணர் டாக்டர் அனீஸ் தாஜுதீன்.

தவறான நம்பிக்கையும் உண்மையும்

நான் ஃபிட்டாக உடற்தகுதியுடன் இருக்கிறேன், நாள்தோறும் உடற்பயிற்சி செய்கிறேன், அதனால் இதய நோய் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை

ஃபிட்டாக இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய நோய் வராமல் பாதுகாக்கும். அதற்காக இதய நோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. இதய நோய் ஆபத்துக்கான வாய்ப்பு உள்ளது. மிகவும் சுறுசுறுப்பான நபராக இருந்தால்கூட மரபியல் காரணங்கள், உணவு முறை, புகைபிடித்தல், கொழுப்பின் அளவு அதிகரிப்பது ஆகியவற்றால் இதய நோய் ஏற்படலாம்.

நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறி

நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறி என்பது உண்மையல்ல. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், சோர்வு, கை உணர்வு இல்லாதது, அஜீரணம் போன்ற அசௌகரியம் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

குறைந்த கொழுப்புள்ள உணவை மட்டும் சாப்பிடுவது, ஜங்க் புட் எனும் பொருந்தா உணவைத் தவிர்த்தால் இதய ஆபத்து இருக்காது

பொருந்தா உணவைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்றாலும் இதய நோய்க்கு மேற்குறிப்பிட்ட காரணிகள் இருக்கின்றன. உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலோ அல்லது உடலில் கொழுப்புகள் குறைவாக இருந்தாலும் அவற்றில் நல்ல கொழுப்புகள் இல்லாவிட்டாலோ ஆபத்துதான்.

ஸ்டேடின் மருந்துகளை உட்கொள்வதால் விரும்பும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

(ஸ்டேடின்கள் என்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைக்கும் மருந்து ஆகும்)

ஸ்டேடின்கள் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் உணவு, வாழ்க்கை முறை அதைவிட முக்கியமானவை. மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன், நீரிழிவு நோய் ஆகியவையும் இதயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வைட்டமின்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். ஆனால் அவை இதய நோய்களைத் தடுக்காது. அரிதான குறைபாடுகள் மட்டுமே இதய நோய்களை ஏற்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT