ஆண்டுதோடும் புதிதாக கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை மற்றும் அதன் செலவிடும் தொகை எவ்வாறு அதிகரித்துள்ளதோ, அதுபோலவே, ஆண்டுதோறும் கிரெடிட் கார்டு தவணை தவறுவதால் பதிவாகும் குற்றங்கள் பல கோடியை எட்டியிருக்கிறது.
அதாவது, 2025ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கிரெடிட் கார்டு தொடர்பான குற்றங்களில் பதிவான தொகை ரூ.33,886 கோடி என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் ரூ.29,983.6 கோடி ரூபாய், கடன் தொகையை 91 முதல் 180 நாள்களுக்குள் திரும்ப செலுத்தாததால் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் எளிதாக கிரெடிட் கார்டுகளை வழங்குவது, மக்களின் செலவிடும் வழக்கம் போன்றவை, கிரெடிட் கார்டு தவணைகளை தவறவிடும் சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன.
இதுபோன்ற சிக்கல்களில் மாட்டாமல், கிரெடிட் கார்டு விரிக்கும் வலையில் சிக்காமல் இருக்க சில வழிமுறைகள்
1. கிரெடிட் கார்டு கட்டணம்
தனி நபர் கடனுக்கான மாத தவணையை தவறவிடுவதற்கு ஒப்பானதுதான் கிரெடிட் கார்டு கட்டணம். அந்த உரிய நாளுக்குள் செலுத்தத் தவறிவிட்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் கட்டணம் செலுத்தும் நாளுக்குள் கட்டணத்தை செலுத்தவும்.
2. கிரெடித் தொகையில் கவனம்
ஒரு கிரெடிட் கார்டின் அதிகபட்ச தொகையில் எப்போதும் 30 சதவீதத்துக்கு மேல் பணத்தை செலவிடாதீர்கள். இது உங்களை எப்போதும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லாது. அதாவது ஒரு லட்சம் கிரெடிட் லிமிட் கொண்ட ஒரு கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால், அதில் அதிகபட்சமாகவே 30 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் செலவிடலாம்.
3. செலவுக் கணக்கை கண்காணிக்கவும்
எப்போதும், கிரெடிட் கார்டில் செலவிடும் தொகையை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது உங்களது செலவிடும் பழக்கத்தை சரி செய்ய உதவலாம்.
4. கிரெடிட் கார்டை பயன்படுத்தும் முன்
ஒரு கிரெடிட் கார்டை வாங்கியதும், அதன் மறைமுக கட்டணங்கள், வட்டி விகிதம், கட்டணம் செலுத்தும் சுழற்சி என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் நிச்சயம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
5. மிக அவசியமானதை செலவிடுங்கள்
மிகவும் அவசியம் என்றால் மட்டுமே கிரெடிட் கார்டு வைத்து பொருள்களை வாங்கலாம். செலவிடும்போது கிரெடிட் கார்டு கொடுத்தாலும், அந்தத் தொகையையும் உங்கள் வருவாயிலிருந்துதான் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. தம்பட்டம் வேண்டாமே
எல்லோரிடமும் தான் கிரெடிட் கார்டு வைத்திருப்பதாக சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். உங்களிடம் இருக்கும் டெபிட் கார்டு போலவே கிரெடிட் கார்டும். உங்களது அவசியத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.
இதையும் படிக்க... தீபாவளி அன்றே வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்.! தில்லி கார் வெடிப்பில் திடீர் திருப்பம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.