2025ஆம் ஆண்டு தொடங்கியபோது, இந்த ஆண்டில் முதல் வேளையாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றுதான் பலரும் உறுதியேற்றிருப்பார்கள். ஆனால், இதோ ஆறு வாரங்கள்தான் இருக்கிறது இந்த ஆண்டு நிறைவடைய.
சரி.. அடுத்த ஆண்டு பிறக்கும்போது மீண்டும் உறுதியேற்றுக்கொள்வோம் என்று நினைக்காமல், இன்னும் 6 வாரத்துக்குள், எண்ணியதை முடிக்க முடியும் என்று நம்பிக்கைக் கொடுத்துள்ளார் உடற்பயிற்சி ஆலோசகர் ராஜ் கண்பத் என்ற உடல் நல ஆலோசகர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், 2025ஆம் ஆண்டுக்குள் உடல் எடையைக் குறைக்கும் சில சின்ன சின்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அவர் தன்னுடைய விடியோவில், 2025 நிறைவடையவிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு பிறந்த பிறகு, உடல் எடையைக் குறைக்க உறுதியேற்கும் வரை வரும் 6 வாரங்களுக்குள் குறைந்தபட்சம் மேலும் உடல் எடைக் கூடாமல் இருக்க நிச்சயம் இந்த வழிமுறைகள் யாருக்கேனும் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல், ஜனவரி 1 வரையிலான காலக்கட்டத்தில் உடல் எடை கூடாமல் தவிர்க்கும் வழிமுறைகளாகக் கூட இதனைக் கடைப்பிடிக்கலாம்.
1. அடுத்த ஆறு வாரங்களுக்கு 20 முறை உடற்பயிற்சி
இன்னும் ஆறு வாரங்கள் இருக்கின்றன. ஒரு வாரத்துக்கு மூன்று முறை உடற்பயிற்சி செய்தாலும் இந்த ஆண்டுக்குள் 20 முறை கட்டாயமாக உடற்பயிற்சி செய்திருப்பார்கள். எனவே, ஒரு நாள் விட்டு ஒருநாள் உடற்பயிற்சி செய்தாலே போதும் என்கிறார்.
2. நாள் ஒன்றுக்கு 8000 நடைகள்
ஒரே நேரத்தில் தொடங்கி 8000 நடை நடக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நிச்சயம் 8000 நடைகள் நடப்பதை ஒரு நாளில் உறுதி செய்துகொண்டால் போதும். அது காலை முதல் இரவு வரை என கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தினமும் 8000 - 10000 நடைகள் என்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்தல் நலம் என்கிறார்.
3. புரதமும் காய்கறிகளும்
எந்த விதமான புரதமாகவும் இருக்கலாம், எந்த காய்கறிகளாகவும் இருக்கலாம். ஆனால், எண்ணெய், வறுத்தது, க்ரீம்கள் இல்லாமல் ஒவ்வொரு உணவும் அதிக புரதமும் காய்கறிகளும் அதிகம் கொண்ட உணவாக இருப்பதை கூடுமானவரை உறுதி செய்துகொள்ளுங்கள்.
4. சாப்பாடு அளவு
உங்களால் முடிந்தால், வயிறுக்குத் தேவையான அளவை விட குறைவாக சாப்பிடுங்கள். இல்லையென்றால் திருப்தியடையும் வரை சாப்பிடுங்கள், ஆனால் ஒருபோதும் வயிறு முழுக்க சாப்பிடவே சாப்பிடாதீர்கள்.
5. உடல் எடை என்ன
உங்கள் உடல் எடை என்ன என்பதில் நிச்சயம் கவனம் செலுத்துங்கள். இன்று உடல் எடை என்ன, நாளை உடல் எடை எவ்வளவு இருக்கிறது என்பதை நாள்தோறும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் செய்துபாருங்கள். அடுத்த ஆண்டு நீங்கள் எடுக்கும் உறுதியை நிச்சயம் உறுதியாக செய்து முடிப்பீர்கள். இல்லாவிட்டாலும் நிச்சயம் உங்கள் உடல் எடை மீதான கவனத்தை உங்களால் ஒருபோதும் நிராகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுவிடும் என்கிறார் கண்பத்.
இது முழுக்க முழுக்க சமூக வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட விடியோவிலிருந்து பகிரப்பட்ட தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.