நோல் சகோதரர்கள் வளர்த்தெடுத்த ஃபோட்டோ ஷாப் வரலாறு!
போட்டோஷாப் 6.0 முந்தையப் பதிப்பைப்போல இரண்டு மடங்கு ரேம் இருந்தாலே செயல்படும் விதமாக உயர்வுபடுத்தப்பட்ட பதிப்பாக செப்டம்பர் 2000 ஆண்டு இது வெளியிடப்பட்டது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்த தாமஸ் நோல் மற்றும் ஜான் நோல் சகோதரர்கள், கணினித் திரையில் வரைகலையைத் தெளிவாகக் காட்டுவதற்கான முயற்சிகளில் 1987ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டனர். படங்களைச் சரி செய்யும் தங்களது மென்பொருளை "இமேஜ் புரோ' என்ற பெயரில் வெளியிட்டனர். ஆனால் எந்த ஒரு நிறுவனமும் அவர்களது படைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இறுதியில் 1988இல் அடோபி நிறுவனம் அவர்களது மென்பொருளுக்கான ஒட்டுமொத்த விற்பனை உரிமையை வாங்கியது. அதன் பிறகு அவர்களது தீவிர முயற்சியால் அதே மென்பொருள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில், போட்டோஷாப் 1.0 என்ற பெயரில் 1990ஆம் ஆண்டு ஆப்பிள் மேக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய நிலையில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக போட்டோஷாப் மென்பொருள் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு பதினான்காவது புத்தம் புதிய பதிப்பாக தற்போது (2016) போட்டோஷாப் சிசி என்ற பெயரில் புழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை புதிய பதிப்பாக வெளியிடப்படும்போதும் அதில் பல புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றை கீழே தொடர்ச்சியாகக் கொடுக்கின்றோம்.
போட்டோஷாப் 1.0 இந்த முதல் பதிப்பில் நேரடியாக 20 கருவிகளும் ஃபைல், எடிட், மோட், இமேஜ், செலக்ட் மற்றும் விண்டோ என்ற 6 மெனுக்களும் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. கலர் கரெக்ஷன் செய்வதற்காக பேலன்ஸ், ஹ்யூ மற்றும் சாச்சுரேஷன் ஆகிய கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் கர்வ்ஸ், லெவல்ஸ் மற்றும் க்ளோன் டூல்கள் தரப்பட்டிருந்தன. இந்தப் பதிப்பு செயல்பட அன்றைய நாட்களில் வெறும் 2 எம்பி ரேம் (2MB RAM) இருந்தாலே போதும் என்பது வியப்பிற்குரிய தகவலாகும்.
போட்டோஷாப் 2.0 - 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பில் ஃபைல் முதல் ஹெல்ப் வரையிலும் 8 மெனுக்கள் தரப்பட்டிருந்தன. ஃபில்டர் மெனு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டது. கருவிகளில் மாற்றம் இல்லை. டூல் பேனலில் ஃபோர்கிரவுண்ட் மற்றும் பேக்கிரவுண்ட் கலர்களை நிறுத்தும் வசதி, மாஸ்க், ப்ரிவ்யூ வசதிகளும், முதன்முதலாக கோடுகளைப் பயன்படுத்தி வரையும் பாத் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டன.
போட்டோஷாப் 3.0 - 1994ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது இந்தப் பதிப்பு. இதில்தான் முதன் முதலாக லேயர் பேலட் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் மேக் வகைக் கணினிகளுக்கு மட்டுமல்லாது, முதன் முதலாக ஐபிஎம் வகைக் கணினிகளிலும் செயல்படும்விதமாக இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டது. போட்டோஷாப்பின் முதல் மூன்று பதிப்புகளும் ஃப்ளாப்பி டிஸ்குகளிலேயே கொடுக்கப்பட்டன. இதனைக் கணினியில் நிறுவுவதற்கு 16 எம்பி ரேம் மற்றும் 25 எம்பி இடமும் இருந்தாலே போதும் என்றிருந்தது.
போட்டோஷாப் 4.0 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1996 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அட்ஜஸ்ட்மென்ட் லேயர் வசதியும், அடோபி நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுடன் இணைந்து செயல்படும் (இன்டர்ஃபேஸ்) வசதியும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தப் பதிப்பே முதன் முதலாக குறுவட்டில் கொடுக்கப்பட்டது. அடோபி நிறுவனத்தில் இணைந்து தனது பங்களிப்பைக் கொடுக்கத் துவங்கிய சீத்தாராமன் நாராயணன் என்ற தமிழரின் பெயரும் இந்தப் பதிப்பிலேயே பதிவு செய்யப்பட்டது.
போட்டோஷாப் 5.0 இணையம் என்ற தொழில்நுட்பம் பிரபலமடையத் துவங்கியிருந்த 1998ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் பதிப்பில், நிறங்களை நிர்வகிக்கும் வசதியும், மேக்னடிக் லாúஸô கருவியும், முழுமையாகச் செயல்படும்விதமாக பென் கருவியும், பிற கருவிகளுக்குத் துணைக் கருவிகள் உள்ள வசதியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
இந்தப் பதிப்பைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே 1999ஆம் ஆண்டு மே மாதம் 5.5 பதிப்பு வெளிவந்தது. இதிலேயே படங்களை இணையதளத்திற்கு ஏற்றாற்போல சேமித்தல், படங்களை வெட்டுதல் (ஸ்லைஸிங்) மற்றும் ரோல்ஓவர் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் ராஸ்டர் வகைப்படங்களுக்கான அனிமேஷன் வசதி, இமேஜ் ரெடி என்ற புதிய மென்பொருள் மூலம் செயல்படும்விதமாக, டூல்ஸ் பேனலில் புதிய கருவியாகக் கொடுக்கப்பட்டது. இந்தப் பதிப்பு செயல்பட கணினியில் குறைந்தபட்சம் 32 எம்பி ரேம் தேவையெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
போட்டோஷாப் 6.0 முந்தையப் பதிப்பைப்போல இரண்டு மடங்கு ரேம் இருந்தாலே செயல்படும் விதமாக உயர்வுபடுத்தப்பட்ட பதிப்பாக செப்டம்பர் 2000 ஆண்டு இது வெளியிடப்பட்டது. வெக்டார் ஷேப்ஸ், லிக்விஃபை ஃபில்டர் மற்றும் லேயர் ஸ்டைல்ஸ் ஆகியவற்றிற்கான டயலாக் பாக்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தொடரும்...