தொழில்நுட்பம்

ஜிஎஸ்டி  ஹெல்ப் லைன் செயலி!

ஒய்.டேவிட் ராஜா

பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரியின் பெயர் ஜிஎஸ்டி ஆகும். இந்த ஜிஎஸ்டி-யில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மிகவும் எளிய வடிவில் வந்துள்ள சிறந்த செயலி ஜிஎஸ்டி ஹெல்ப் லைன். இது தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் வந்துள்ளது. 

ஜிஎஸ்டி குறித்த உடனடிச் செய்திகள், ஜிஎஸ்டி கட்டுரைகள், ஜிஎஸ்டி படிவங்கள்,ஜிஎஸ்டி கால்குலேட்டர், வரைபடங்கள், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றிய உடனடி விவரங்கள்,ஜிஎஸ்டி சட்ட ஒழுங்குகள் போன்ற விவரங்களை இந்த செயலி கொண்டுள்ளது. பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையானதாக உள்ளது.ஜிஎஸ்டி குறித்த உங்களது சந்தேகங்களுக்கு உடனடித் தீர்வாக இது அமைந்துள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான உடனடிச் செய்திகள் இதில் தரப்படுகின்றன. இதனால் இதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குத் தேவையான உடனடித் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே வந்த செய்திகளையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஜிஎஸ்டி வரி கட்டும் ஒவ்வொருவரும் சில படிவங்களைப் பூர்த்தி செய்து தர வேண்டியிருக்கும். அந்தப் படிவங்களை பதிவிறக்கம் செய்ய இந்தச் செயலி உதவுகிறது.

ஒருவர், தான் எவ்வளவு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தச் செயலியில் உள்ள கால்குலேட்டர் உதவுகிறது. அதேபோன்று, ஜிஎஸ்டி வரி விகிதங்கள், ஜிஎஸ்டி வரைவுச் சட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு உரிய ஜிஎஸ்டி வரி அமைப்புகள் போன்றவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள இந்தச் செயலி உதவுகிறது.

இந்தச் செயலி,  ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் ஆகிய இயங்குதளத்திலும் செயல்படும்வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT