தொழில்நுட்பம்

வாட்ஸ் ஆப்பிலும் இனி கருத்துக் கணிப்பு நடத்தலாம்!

தினமணி

வாட்ஸ் ஆப் செயலி ’கருத்துக் கணிப்பு’ வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் குழு உரையாடலில்(குரூப் ஷாட்ஸ்) கருத்துக் கணிப்பு வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக வேபேட்டா இன்ஃபோ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதன் படி, இனி குழு உரையாடலின் போது கருத்துக் கணிப்பு வசதியின் மூலம் பிறரின் கருத்துக்களை அறியமுடியும்.

டெலிகிராம் மற்றும் டிவிட்டர் செயலிகளில் இந்த வசதி இருக்கும் நிலையில்  பயனர்களின் தேவையால் இனி வாட்ஸ் ஆப்களிலும் ’கருத்துக் கணிப்பு’ அறிமுகமாக உள்ளது.

இந்த அறிக்கையில் வாட்ஸ் ஆப் செயலி சில ஐஓஎஸ் இயங்கு தளத்தைக் கொண்ட சாதனத்தில்  ‘கிரியேட் போல்ஸ்’(create polls) வசதியை பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இச்செயலி சில பீட்டா ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு வாய்ஸ் காலிங் வசதியை மேம்படுத்தும் பணியில் உள்ளது. இப்புதிய மேம்பாடு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் புகுத்தப்பட இருக்கிறது. இருப்பினும், முதலில் பீட்டா ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மட்டுமே இந்த வசதியை சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த புதிய இண்டர்ஃபேஸ் காலிங் வசதி மூலம் நம்மைத் தொடர்புகொள்பவரின் குரலை வைத்தே அவர் யாரென கண்டுபிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT