நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்..
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:22 AM
ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:22 AM
நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம்.
வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.
நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம்.
15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:16 AM
விண்வெளித்துறையில் அறிவிப்புகள்
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.
2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:16 AM
கல்வித்துறை
நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.
அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.
தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:14 AM
தொழில்துறை தொடர்பான அறிவிப்புகள்
அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:13 AM
சிறிய அளவிலான வருமான வரி பிரச்னைகளை தீர்த்து வைக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 7:08 AM
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்
புது தில்லி: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாவது, 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியிருப்போர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:56 AM
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம் என்று அறிவித்துள்ளார்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:49 AM
விவசாயிகளின் நலன்..
விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு.
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:40 AM
அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:40 AM
கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன.
எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.
மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:39 AM
நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:32 AM
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும்.
நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:30 AM
இந்திய தேசிய ரயில் திட்டம் 2030
இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:25 AM
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு
தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளுக்கு மூலதன நிதியாக கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி வரை வழங்கப்படும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு (ஐஐபிஓ ) வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:20 AM
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி..
இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் இருக்கிறது.
உலகிலேயே மிகக் குறைந்த இறப்பு விகிதமாக பத்து லட்சம் பேருக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்தது.
ஆஸ்திரேலியாவில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ள வெற்றி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு உத்வேகத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:16 AM
ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுத்தப்பட உள்ளது. இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.
நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது.
சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:15 AM
ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்.
வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ரயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:08 AM
தமிழகம் - கேரளத்தை இணைக்கும் நவீன நெடுஞ்சாலை
தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய பட்ஜெட்டில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல விமான நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:07 AM
தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலைத் திட்டங்கள்
தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றி வரும் உரையில், நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்.
ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 6:07 AM
பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய திட்டம்
நாட்டு மக்களின் உடல்நலனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், ரூ.64,180 கோடியில் சுகாதாரத் துறையை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:53 AM
கரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி
கரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று விஷயங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:48 AM
தற்சார்பு இந்தியா திட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பொறுப்பு மத்திய பட்ஜெட்டுக்கு உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு 3 ஆத்மநிர்பார் திட்டங்களுக்கு உதவிகள் அறிவிக்கப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:44 AM
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 27 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2021-ஆம் அண்டிலும் கரோனாவுக்கு எதிரான போர் தொடரும். புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:39 AM
கரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை மிக விரைவாகக் கொண்டுவந்துள்ளது.
பொதுமுடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கரோனாவால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
கரோனா பணிக் காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.
ஒரே நாடு ஒரேரேஷன் திட்டம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:37 AM
நிர்மலா சீதாராமன் உரை..
இதுவரை இல்லாத நோய்த் தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். ஏழைகள் நல்வாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கக் காலத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:34 AM
பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் இன்று 2021 - 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:29 AM
சற்று நேரத்தில்..
நாடாளுமன்றத்தில் சற்று நேரத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:27 AM
மத்திய நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் மத்திய நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:20 AM
மத்திய நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் மத்திய நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:17 AM
மத்திய நிதிநிலை அறிக்கையுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:09 AM
நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்
நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். விரிவான தகவல்களுக்கு..
Updated On : 1 பிப்ரவரி, 2021 at 5:08 AM
காகிதமில்லா பட்ஜெட்: மத்திய அரசு முடிவு
கரோனா பரவலை தடுக்கும் விதமாக நிகழாண்டு பட்ஜெட் ஆவணங்களை காகிதத்தில் அச்சடிக்க வேண்டாமென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரிவான செய்திக்கு..
Updated On : 31 ஜனவரி, 2021 at 9:15 PM
ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
Updated On : 31 ஜனவரி, 2021 at 9:13 PM
திருக்குறளை மேற்கோள் காட்டி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். விரிவான செய்திக்கு..
Updated On : 31 ஜனவரி, 2021 at 9:10 PM
வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
Updated On : 31 ஜனவரி, 2021 at 7:59 PM
பட்ஜெட் உரை நிறைவு: அவை நாளை வரை ஒத்திவைப்பு
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மக்களவை செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திங்கள்கிழமை(பிப்.1) தாக்கல் செய்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
சரியாக காலை 11 மணிக்கு உரையைத் தொடங்கிய அமைச்சர் 12.50 மணிக்கு முடித்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் உரையை வாசித்தார்.
இதையடுத்து, நாடாளுமன்ற அவை நாளை(செவ்வாய்கிழமை) மாலை 4 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 2020 பட்ஜெட் உரையை மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Updated On : 31 ஜனவரி, 2021 at 7:53 PM
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
புது தில்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
அதில், பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்னையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.
கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
Updated On : 31 ஜனவரி, 2021 at 7:52 PM
வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு.
இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.
புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.
பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.
பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு.