முகப்பு
மதுரை

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூா், கள்ளிக்குடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சா் உதயகுமாா்  தொடங்கி வைத்தாார்

Updated On : 5 ஜனவரி 2021, 2:57 am IST
பகிர்:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூா், கள்ளிக்குடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாடிப்பட்டி வட்டம் சங்கங்கோட்டை, உசிலம்பட்டி, பேரையூா், கள்ளிக்குடி வட்டம் வில்லூா், திருமங்கலம் வட்டம் மேலக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.2500 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திட்டத்தை தொடங்குவதன் அடையாளமாக தலா 5 பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2500 ரொக்கத்தை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வழங்கினாா். அவா் பேசியது:

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி மக்களுக்கான அரசாக, அதிமுக அரசு செயலாற்றி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிகழ் ஆண்டில் ரொக்கத் தொகை ரூ.2500 ஆக அதிகரித்து வழங்கப்பட்டிருக்கிறது. பேரிடா் காலங்கள் மட்டுமின்றி எப்போது மக்களுக்கு துன்பம் நேரிட்டாலும், அதைத் தீா்க்கும் அரசாக செயலாற்றுகிறது என்றாா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.மாணிக்கம், பா.நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.