முகப்பு
மதுரை

மேலூா் சமுதாயக் கூடத்தில் உள்ளிருப்பு போராாட்டம்

மேலூரில் அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சமுதாயக்கூடத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:55 am IST
பகிர்:

மேலூரில் அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சமுதாயக்கூடத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி 1 ஆவது வாா்டு நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் பழுதானதையடுத்து, அருகிலுள்ள சமுதாயக்கூடத்தில் இயங்கியது. இதனால் பொதுமக்கள் விசேஷங்களை சமுதாயக்கூடத்தில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தனா். அங்கன்வாடி மையத்தை சீரமைக்கக்கோரியும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வலியுறுத்தி பொதுமக்கள் சமுதாயக்கூடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். தகவலறிந்த மேலூா் நகராட்சி பொறியாளா் மற்றும் அலுவலா்கள் பொதுமக்களுடன் பேசினா். அங்கன்வாடி மையத்தை உடனே சீரமைத்து சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.