முகப்பு
நாகப்பட்டினம்

அகில இந்திய மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி சார்பு அமைப்பான அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் நாகை புதிய 

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:14 pm IST
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி சார்பு அமைப்பான அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் நாகை புதிய  பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய கடல் எல்லையில் மீண்டும் இந்தியக் கடல் படையின் ரோந்து கப்பலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

அகில இந்திய மீனவர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் வி. ஜெயபால் தலைமை வகித்தார்.

அகில இந்திய மீனவர் சங்கத் தலைவரும், முன்னாள் மக்களவை  உறுப்பினருமான எம். அப்பாதுரை சிறப்பு அழைப்பாளராகக்  கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

அகில இந்திய மீனவர் சங்க மாவட்டப் பொறுப்பாளர்  நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர்கள் எஸ். சம்பந்தம், இரெ. இடும்பையன், ஒன்றியச்  செயலர்கள் ராமலிங்கம், டி. செல்வம், சிவகுருபாண்டியன்,  எம்.கே. நாகராஜன், இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்க நாகை மாவட்டத் தலைவர் ஏ.பி. தமீம் அன்சாரி, மாதர் சங்க  மாவட்டச் செயலர் எஸ். மேகலா, இளைஞர் பெருமன்ற  மாவட்டத் தலைவர் கே. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments