ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சி
ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும், புதிதாக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, செலுத்தப்படும் விண்ணப்பக் கட்டணம் நாளை முதல் உயர்கிறது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய கடவுச்சீட்டுக்கான (பாஸ்போர்ட்) விண்ணப்பக் கட்டணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் உயர்த்தியிருக்கிறது. இந்த நடைமுறை ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது, 36 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படுகிறது.
Advertisement
Advertisement
கடவுச்சீட்டு (திருத்த) விதிகள், 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், 60 பக்கங்கள் கொண்ட சாதாரண கடவுச்சீட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 2,000-லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவைகளின்போது தத்கல் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும்போது, அதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த 36 பக்கங்களைக்கொண்ட பாஸ்போர்ட் சேதமடைந்து அல்லது தொலைந்துவிட்டால் புதிதாக வழங்குவதற்கு கட்டணம் ரூ.5000 ஆக உயர்வு. 60 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கடவுச்சீட்டு மற்றும் தத்கல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, கல்வியாண்டு தொடங்கும்போது பரபரப்பாக இருந்த மாணவர்கள், கல்லூரி தொடங்கியதும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க இருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
Passport application fees to rise from July 1... Students shocked.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.