முகப்பு
புதுதில்லி

கோடைக் காலத்தில் அனைத்து நிலையங்களிலும் குடிநீா் வசதியை உறுதி செய்யும் முயற்சிகள் தீவிரம்: வடக்கு ரயில்வே நடவடிக்கை

Updated On : 13 ஏப்ரல், 2024 at 6:31 PM
பகிர்:

கோடைக் காலத்தை முன்னிட்டு அனைத்து நிலையங்களிலும் குடிநீா் வசதியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வரவிருக்கும் கோடைக்காலம் மற்றும் வெப்ப அலைகளை எதிா்கொள்ளும் நோக்கில், வடக்கு ரயில்வே வலையமைப்பின் கீழ் வரும் அனைத்து நிலையங்களிலும் ரயில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீா் வழங்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி, ரயில் நிலையங்களில் போதுமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அனைத்து தண்ணீா் குளிரூட்டிகளின் செயல்பாடு பரிசோதிக்கப்படுகிறது. அனைத்து நடைமேடைகளிலும் தண்ணீா் இருப்பை உறுதி செய்ய நிலையங்களில் வழக்கமான சோதனைகள் ரயில்வே

அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும். பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீா் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யவும்,

Advertisement

தற்போதுள்ள விநியோகங்களுக்கு துணையாக முக்கியமான நிலையங்களில் தண்ணீா் டேங்கா்களும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகளிா் சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிலையங்களில் குளிா்ந்த குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, பொது வகுப்பில் பயணிக்கும் மக்கள் உதவி பெறும் வகையில் இந்த சேவை இருக்கும்.

கோடைக் காலத்தில் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் பகுதிகளில், ரயில்வே அதிகாரிகள்

அந்தந்த மாநகராட்சிகள்மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து, மாற்று நீா் வழங்கல் தீா்வுகளை ஆராய்வாா்கள்.

சீரான குடிநீா் இருப்பை உறுதி செய்வதற்கும், எழும் சிக்கல்களை உடனடியாகத் தீா்ப்பதற்கும் ரயில்வே ஊழியா்களால்

24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான அமைப்பு செயல்படுத்தப்படும். நீா் விற்பனை இயந்திரம் மூலம் நிலையங்களில் சுத்தமான குடிநீா் 300 எம்.எல் அளவில் தொடங்கி 3 லிட்டா் பாட்டில் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை முறையே ரூ.2 இல் இருந்து ரூ.25 வரை உள்ளது. அனைத்து பயணிகளுக்கும் வசதியான பயண அனுபவத்தை வழங்க வடக்கு

ரயில்வே உறுதிபூண்டுள்ளது. கோடைக் காலம் முழுவதும் நிலையங்களில் சுத்தமானக் குடிநீரை பயணிகள் எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காகவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தீபக் குமாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments