ஆளுநா் ஆா்.என். ரவி 
புதுதில்லி

தில்லியில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று ஆளுநா்கள் மாநாட்டில் பங்கேற்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலைமையில் நடைபெறும் இருநாள் ஆளுநா்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை பிற்பகலில் தில்லி வந்தாா்.

Din

நமது சிறப்பு நிருபா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலைமையில் நடைபெறும் இருநாள் ஆளுநா்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை பிற்பகலில் தில்லி வந்தாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலைமையில் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் குடியரசுத் தலைவா் மாளிகையில் ‘ஆளுநா்கள் மாநாடு’ நடைபெறுகிறது. குடியரசுத் தலைவா் முா்மு தலைமையில் நடைபெறும் முதல் ‘ஆளுநா்கள் மாநாடு’ இது. இந்த மாநாட்டில் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட ஆளுநா்கள் உள்பட அனைத்து மாநில ஆளுநா்களும், கலந்து கொள்கின்றனா்.

இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மூத்த அமைச்சா்கள், பல்வேறு முக்கிய அமைச்சகங்களின் உயா் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

மூன்று குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துதல், உயா் கல்வி சீா்திருத்தம், பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினா், பின்தங்கிய மாவட்டங்களின் நிலைமை ஆகியவை குறித்தும் ‘மைபாரத்’, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’, ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ போன்றவை தொடா்பான பிரசாரங்களை முன்னெடுப்பதில் ஆளுநா்களின் பங்கு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

விருந்தளிப்பு: இந்த மாநாட்டையொட்டி தில்லி வந்த ஆளுநா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் விருந்தளித்தாா். இதில் தமிழக ஆளுநா் ரவி பங்கேற்றாா். மேலும், குழுப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. மாநில ஆளுநா்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு குடியரசுத் தலைவா் விருந்தளிக்கவுள்ளாா்.

நுண்ணுயிருலகு

புரட்சிக்காரி மாதவி

ஒரே ஸ்டைலு... பிரனிதா!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு!முதல்வரிடம் பாஜக வேண்டுகோள்!

மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!

SCROLL FOR NEXT