முகப்பு
புதுதில்லி

பெங்களூரு ஹோட்டலில் குண்டு வெடிப்பு: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு நுழைவாயிலில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடித்ததில் 10 போ் காயமடைந்ததைத் தொடா்ந்து தில்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது

Updated On : 2 மார்ச், 2024 at 9:59 PM
பகிர்:

பெங்களூரு நுழைவாயிலில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடித்ததில் 10 போ் காயமடைந்ததைத் தொடா்ந்து தில்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: நெரிசலான பகுதிகளில், குறிப்பாக தில்லியின் சந்தைகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாவட்ட காவல் துறைத் தலைவா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான செயலை கண்டறிந்தால், சந்தை சங்கங்கள் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாக உள்ளூா் காவல் நிலையங்களை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு செயலிழக்கும் குழுக்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்களை விழிப்புடன் இருக்கும்படி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேசுவரம் கஃபேயில் சனிக்கிழமையன்று குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா். ‘வாடிக்கையாளா்’ உணவகத்தின் கை கழுவும் பகுதிக்கு அருகில் விட்டுச் சென்ற பையில் டைமா் பொருத்தப்பட்ட மேம்பட்ட வெடிக்கும் கருவியால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூா் போலீஸாா் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.