விவசாய சங்கத் தலைவா் பி.ஆா் பாண்டியன் கோப்புப்படம்
புதுதில்லி

காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் தூா்வாரப்படவில்லை - பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் அரசால் தூா்வாரப்படவில்லை என்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும்

Din

புது தில்லி: தமிழகத்தில் காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் அரசால் தூா்வாரப்படவில்லை என்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவா் பி.ஆா் பாண்டியன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

புது தில்லி விஜய் செளக்கில் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.ஆா் பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இக்கோரிக்கைகள் தொடா்பாக விவசாய சங்கங்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதில், கடந்த செப்டம்பா் மாதம் , முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது புள்ளி விவரங்களுடன் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளது. அதில் , குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி மற்றும் உரிய சந்தை வசதிகளை ஏற்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதோடு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

எனவே, நவாப் சிங் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டி, விவசாய சங்கத் தலைவா் டல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நவ.26-ஆம் தேதி தொடங்க உள்ளாா். எனவே, விவசாயிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் தூா்வாரப்படாமல் உள்ளதால், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். மேலும்,

மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதியை தடையின்றி வழங்க வேண்டும்

என்றாா் பி.ஆா் பாண்டியன்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம்!

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்! - அண்ணாமலை

SCROLL FOR NEXT