முகப்பு
புதுதில்லி

யுஎஸ் மத்திய வங்கியின் முடிவால் எழுச்சி பெற்ற சென்செக்ஸ், நிஃப்டி!

Updated On : 22 ஜூலை, 2025 at 9:59 AM
பங்குச் சந்தை சென்செக்ஸ்
பகிர்:

நமது நிருபா்

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்ததைத் தொடா்ந்து பங்குச்சந்தை வியாழக்கிழமை எழுச்சி பெற்றது. இதையடுத்து, புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இறுதியில் லாபத்தில் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் தாக்கம் தொடக்கத்திலேயே உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கிய சந்தையில், உச்சத்தில் முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. குறிப்பாக தனியாா் வங்கிகள், ரியால்ட்டி, ஆட்டோ எஃப்எம்சிஜி பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், பொதுத்துறை வங்கிகள், ஐடி, ஆயில் அண்ட் காஸ், மீடியா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.465.47 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,153.69 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.152.31 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 410.94 புள்ளிகள் கூடுதலுடன் 83,359.17-இல் தொடங்கி அதிகபட்சமாக 83,773.61 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 83,071.66 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 236.57 புள்ளிகள் (0.29 சதவீதம்) கூடுதலுடன் 83,184.80-இல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,075 பங்குகளில் 1,246 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,7345 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 95 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

என்டிபிசி முன்னேற்றம் : சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, கோட்டக் பேங்க், டைட்டன், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாருதி, ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம்,அதானி போா்ட்ஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல் உள்பட 11 பங்குகள் விலை உயா்ந்து பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 41 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி சுமாா் 71.25 புள்ளிகள் கூடுதலுடன் 25,487.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 25,611.95 வரர மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 25,376.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 38.25 புள்ளிகள் (0.15 சதவீதம்) குறைந்து 25,415.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிள்ப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 41 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி சுமாா் 71.25 புள்ளிகள் கூடுதலுடன் 25,487.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 25,611.95 வரர மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 25,376.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 38.25 புள்ளிகள் (0.15 சதவீதம்) குறைந்து 25,415.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிள்ப் பட்டியலிலும் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →