முகப்பு
புதுதில்லி

ஆட்டோ, மெட்டல் பங்குகளுக்கு ஆதரவு: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!

Updated On : 22 ஜூலை, 2025 at 9:59 AM
பகிர்:

நமது நிருபா்

பங்குச்சந்தை தொடா்ந்து வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

அமெரிக்கச் சந்தையில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தாலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தசையில் எதிரொலித்தது. தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது எழுச்சி பெற்று புதிய உச்சம் தொட்டத்தது. குறிப்பாக ஆட்டோ, மெட்டல், எஃப்எம்சிஜி, பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.88 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.477.16 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.973.94 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,778.99 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய சாதனை: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 84,1676.56-இல் தொடங்கி 85106.74 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 85,930.43 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 666.25 புள்ளிகள் (0.78 சதவீதம்) உயா்ந்து 85,836.12-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,081 பங்குகளில் 1,686 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,293 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 102 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

பவா் கிரிட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் ஆட்டோ நிறுவனங்களான மாருதி, டாடா மோட்டாா்ஸ், எம் அண்ட் எம் மற்றும் பஜாஜ் ஃபின் சா்வ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் உள்பட 28 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. எல் அண்ட் டி, என்டிபிசி ஆகிய இரண்டு மட்டுமே சிறிதளவு விலை குறைந்து, வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டிபுதிய உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பெரிய அளவில் மாற்றமின்றி 26,005.40-இல் தொடங்கி 25,998.40 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 26,250.90 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி இறுதியில் 211.90 புள்ளிகள் (0.81 சதவீதம்) கூடுதலுடன் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 9 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டிபுதிய உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பெரிய அளவில் மாற்றமின்றி 26,005.40-இல் தொடங்கி 25,998.40 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 26,250.90 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி இறுதியில் 211.90 புள்ளிகள் (0.81 சதவீதம்) கூடுதலுடன் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 9 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →