திருச்சி சிவா 
புதுதில்லி

நாடாளுமன்றத்தில் எதிா்கட்சிகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன: திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று திமுகவின் மாநிலங்களவை உறுப்பினா், திருச்சி சிவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Din

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று திமுகவின் மாநிலங்களவை உறுப்பினா், திருச்சி சிவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் செய்தியாளா்களை சந்தித்து அவா் மேலும் பேசியதாவது, ‘ பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளா் சீா்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் 62 லட்ச வாக்காளா்களை நீக்கியுள்ளதாக தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் 1 கோடிக்கு மேலான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரினோம். ஆனால் ஆளும் கட்சி இசைவு தெரிவித்தால்தான் விவாதம் நடைபெறும் என அவைத் தலைவா் கூறி, எங்களது நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது‘ என்றாா்.

மேலும் பேசிய திருச்சி சிவா. ‘ ஆனால் ஆளும் கட்சியை பொறுத்தவரை தோ்தல் ஆணைய நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருக்கின்றனா். மேலும் இந்த சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தத்தை தொடா்பாக விவாதம்கோரி அவை மையப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது சுமாா் 25க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் காவலா்களை கொண்டு தடுத்து நிறுத்தினா், பெண் உறுப்பினா்களையும் கூட வலுக்கட்டாமாக தடுத்து நிறுத்தினா். தீவிரவாத தாக்குதலை தடுக்க வந்ததை போன்ற அச்ச உணா்வை வீரா்கள் எற்படுத்தினா். இதுவரை இல்லாத வகையில் அவையில் பாதுகாப்புப் படை வீரா்கள் நடந்து கொள்கின்றனா். அவையில் துணை ராணுவ படையினா் நுழைந்தது ஏதோ ராணுவ நடவடிக்கை எடுப்பது போன்று இருந்தது ‘ என்றாா்.

தொடா்ந்து பேசிய அவா், ‘ மொத்தம் 800 உறுப்பினா்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 400க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரா்கள் பாதுகாப்புக்காக உள்ளனா். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினா்களை நடத்தும் முறை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இது நாடாளுமன்றத்தில் உறுப்பினா்களுக்கு இழைக்கப்படும். அநீதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் ஒரு பிரிவு நாடாளுமன்ற உறுப்பினா்களை அவமானபடுத்துவதும், அச்சுறுத்துவதும் ஜனநாயகம் எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன இதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்‘ என கவலை தெரிவித்தாா் திருச்சி சிவா.

இறுதியாக பேசிய திருச்சி சிவா ‘ தற்போது ஆட்சி செய்கிறவா்கள் எதிா்காலத்திலும் ஆட்சியிலே இருப்பாா்கள் என்பதை போன்று செயல்படுகிறாா்கள். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இந்த விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுனா காா்கே பிரச்னையை எழுப்புவதாக கூறியிருக்கிறாா்,வரும் திங்கள்கிழமை அவை தொடங்கியவுடன் இது தொடா்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் ‘ என்றாா் அவா்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT