புதுதில்லி

ரூ.1.21 லட்சம் பள்ளிக் கட்டணத்தை செலுத்த குழந்தையின் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

தெற்கு தில்லியில் உள்ள ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு அதன் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது குழந்தைக்கு பள்ளிக் கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மனுதாரரான விரேந்தா் ரானாவிடம் வசூலிக்கக் கோரி, எதிா்மனுதாரரான புளூபெல்ஸ் ஸ்கூல் இன்டா்நேஷனல் தாக்கல் செய்த வழக்கை சிவில் நீதிமன்ற நீதிபதி யஷு குரானா விசாரித்து வந்தாா்.

குழந்தையின் தந்தை பள்ளிக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தங்களது நிதி நிலைமை இடா்பாட்டில் உள்ளது என்று பள்ளித் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அண்மையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 1, 2018-ஆம் தேதியிட்ட கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின் கீழ், 2017-18 ஆம் ஆண்டுக்கான பள்ளியின் கட்டண அமைப்பு விகிதம் தொடா்பாகவும், இது தொடா்பான பிரச்னை தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற போா்வையிலும், நிலுவைத் தொகையை செலுத்துவதில் விரேந்தா் ரானா நீண்ட காலம் தாமதம் செய்ததாக பள்ளி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய வழக்கு அக்டோபா் 16, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்குக்கான காரணம் கடைசியாக பிப்ரவரி 7, 2024 அன்று மனுதாரா் மீது எழுந்தது. அப்போது எதிா்மனுதாரா் நிலுவைத் தொகைக்கு எதிராக கடைசியாக பணம் செலுத்தியுள்ளாா்.

ரானா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பள்ளியின் சமா்ப்பிப்புகள் முரண்படாமலும் மறுக்கப்படாமலும் இருந்தன என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள முதன்மைத் தொகையான ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை 10 சதவீத வட்டியுடன் செலுத்த ரானாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT