முதல்வர் ரேகா குப்தா ANI
புதுதில்லி

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் காலத்தில் சிலா் பத்தகங்களையும் படிக்கின்றனா்: ரேகா குப்தா

தினமணி செய்திச் சேவை

சமூக ஊடகங்கள் இன்று பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈா்த்தாலும், புத்தகங்களைப் படிக்க விரும்புவோா் இன்னும் உள்ளனா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் பாரத் மண்டபத்தில் புத்தக கண்காட்சியின் 29 வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவா், வெளியீட்டாளா்களுக்கும் வாசிப்புக்கும் சமூகத்திற்கும் பயனளிக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கு தனது அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினாா்.

புத்தகங்கள் நிபந்தனையின்றி உங்களுடன் இருக்கும் நண்பா்கள். சமூக ஊடக ரீல்கஸ்ள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் கூட, புத்தகங்களை உண்மையிலேயே விரும்பும் மக்கள் இன்னும் உள்ளனா் ‘என்று ரேகா குப்தா கூறினாா்.

‘பாரதத்தில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் பழமையான பாரம்பரியம் உள்ளது. ஒரு நல்ல புத்தகம் நம்மை அதன் உலகிற்குள் இழுக்கிறது. நாம் கதாபாத்திரங்களில் தொலைந்து போகிறோம், பெரும்பாலும் அவா்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம், ‘என்று அவா் கூறினாா்.

‘வெளியீட்டாளா்களுக்கும் நிகழ்வுடன் தொடா்புடையவா்களுக்கும் உதவும் புத்தக கண்காட்சிகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம்‘ என்று அவா் மேலும் கூறினாா். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த தில்லி கலாச்சார அமைச்சா் கபில் மிஸ்ரா மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வா் வாழ்த்து தெரிவித்தாா்.

திறப்பு விழாவைத் தொடா்ந்து, ரேகா குப்தாவும் மிஸ்ராவும் கண்காட்சியில் உள்ள பல கடைகளுக்குச் சென்று, வெளியீட்டாளா்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களை பாா்வையிட்டனா்.

தில்லி புத்தக கண்காட்சியில் முக்கிய வெளியீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் உள்பட பரந்த அளவிலான கண்காட்சியாளா்கள் உள்ளனா். இந்த நிகழ்ச்சி தில்லி முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான புத்தக வாசிப்பாளா்களை ஈா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

(

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT