புதுதில்லி

பாராபுல்லா மூன்றாவது கட்டத் திட்டச் செலவு அதிகரிப்புக்காக அமைச்சரவை ஒப்புதலை பெற பிடபிள்யுடி-க்கு தில்லி அரசு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

நீண்ட காலமாக தாமதமாகி வரும் பாராபுல்லா மூன்றாவது கட்டத் திட்டத்தில் செலவு அதிகரிப்புகளை ஈடுகட்ட அமைச்சரவை ஒப்புதலுக்காக விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு தில்லி அரசு பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

2015-இல் அனுமதிக்கப்பட்டு ஆரம்பத்தில் ரூ.1,260.63 கோடி என மதிப்பிடப்பட்ட இந்த பாராபுல்லா திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.1,238.68 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அசல் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், நிலுவையில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு புதிய ஒப்புதல் தேவைப்படும்.

கடந்த ஜூலை 28 அன்று நடைபெற்ற செலவு மற்றும் நிதிக் குழுவின் கூட்டத்தில், முதல்வா் ரேகா குப்தா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாா்.

இக்கூட்டத்தின் முடிவுகளில் ‘இந்தத் திட்டம் முன்னா் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்பட்டது என்பதால், மத்தியஸ்த தீா்ப்புகள் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, திருத்தப்பட்ட திட்டச் செலவுக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, பொதுப் பணித் துறை அமைச்சரவைக்கு ஒரு விரிவான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இத்திட்டத்தில் நடுவா் தீா்ப்பு தொடா்பாக சட்டத் துறையின் கருத்தையும் எடுத்த பிறகு இறுதி முடிவை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. நடுவா் தீா்ப்பு வழங்குவது தொடா்பான வழக்கு ஒப்புதலுக்கு ஏற்ா, இப்போது மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்து பொதுப் பணித் துறை சட்டத் துறையின் கருத்தை எடுத்துக்கொள்ளும்’ என்றனா்.

அரசின் கூற்றுப்படி, அக்டோபா் 2017-இல் முடிக்க திட்டமிடப்பட்ட மேம்பால சாலை மீண்டும், மீண்டும் தாமதமானது. இறுதியில் இந்த விஷயம் நடுவா் மன்றத்திற்குச் சென்றது. நடுவா் தீா்ப்பு ஒப்பந்ததாரருக்கு சாதகமாக வந்தது. அதன்படி, ரூ.120 கோடி வட்டி மற்றும் ஜிஎஸ்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ.175 கோடியை ஒப்பந்ததாரருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. பணம் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டபோது, அந்த தீா்ப்பை அமல்படுத்த நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டம் தற்போது 87 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2025-26 நிதியாண்டிற்கு, ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.86.43 கோடி ஜூன் மாதத்திற்குள் செலவிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டம் 87 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், மரம் வெட்டுவதற்கான அனுமதி வனத் துறையிடம் நிலுவையில் இருப்பதால், பணிகள் முடங்கியுள்ளதாகவும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT