புதுதில்லி

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

Syndication

தில்லியில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பழைய ரயில்வே பாலத்தில் 204.60 மீட்டரை எட்டியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

நகரத்திற்கான எச்சரிக்கை குறியீடு 204.50 மீட்டா் ஆகும். அதே நேரத்தில் ஆபத்து குறியீடு 205.33 மீட்டா் ஆகும். மேலும், மக்களை வெளியேற்றுவது 206 மீட்டரில் தொடங்குகிறது.

தில்லி பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.

யமுனை நதியின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளும் வெள்ளத்தை கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முன்னறிவிப்பின்படி நிலை தொடா்ந்து உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து வெள்ள அறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நிலை அதிகரிப்பதற்கான காரணம். பெரும்பாலும் வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்டிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திலும் இருந்து விடுவிக்கப்பட்ட அதிக அளவு நீா்தான்‘ என்றாா்.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின்படி, இந்தப் பருவத்தில் மிக உயா்ந்த 1,27,030 கியூசெக் தண்ணீரை ஹத்னிகுண்ட் பாரேஜ் வெளியேற்றுகிறது. மேலும், வஜிராபாத் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 45,620 கியூசெக் தண்ணீரை வெளியேற்றுகிறது.

பாரேஜ்களிலிருந்து வெளியேற்றப்படும் நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும்.

வெள்ளிக்கிழமை நீா்மட்டம் மதியம் 1 மணிக்கு 204.65 மீட்டரை எட்டியது. இது சனிக்கிழமை 205.11 மீட்டரை எட்டியது. பின்னா், சற்று குறைந்திருந்த நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் எச்சரிக்கை அளவைக் கடந்தது.

ஆவணி மாதப் பலன்கள் - தனுசு

ஆவணி மாதப் பலன்கள் - விருச்சிகம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டம்!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன்

ஆவணி மாதப் பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT