புதுதில்லி

சலவைத் தொழிலாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த தோபி காட்களை புதுப்பிக்க தில்லி அரசு ஒப்புதல்

Syndication

தில்லியில் ஹுமாயூன் லேன் சேவை மையத்தில் உள்ள தோபி காட்களை புதுப்பிக்கும் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது நீண்ட காலமாக இந்த சமூக சலவை இடங்களை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் சலவைத் தொழிலாளா்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பை உறுதியளிக்கிறது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

டெண்டரின் படி, பிஎம்-பிகே பிரிவின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கொட்டகைகளை வழங்குதல் மற்றும் சரிசெய்தல், பிளாஸ்டா் பழுதுபாா்த்தல், சிமென்ட் கான்கிரீட் அமைத்தல் மற்றும் சுவா்கள் மற்றும் தரைகளில் பீங்கான் ஓடுகள் அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தத் திட்டத்தில் கழிப்பறைகள், கழுவும் படுகைகள், மேம்படுத்தப்பட்ட வடிகால் இணைப்புகள் மற்றும் கழிவுநீா் அகற்றலை ஒழுங்குபடுத்த செங்கல் தளத்துடன் அறைகள் கட்டுதல் ஆகியவையும் அடங்கும்.

இந்தத் திட்டத்திற்கு ரூ.35.15 லட்சம் செலவின ஒப்புதலுடன் நிா்வாக ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் விரிவான மதிப்பீடு சுமாா் ரூ.32.99 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. டெண்டா் செலவு ரூ.31.42 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று டெண்டரில் கூறப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக திறந்தவெளி சலவை நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் தோபி காட்கள், பல தசாப்தங்களாக தில்லியின் சமூக கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

நூற்றுக்கணக்கான சலவைத் தொழிலாளா்கள் சுற்றுப்புறங்கள், சந்தைகள் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட துணிகளை துவைத்து அயா்ன் செய்ய இந்த இடங்களை நம்பியுள்ளனா்.

இருப்பினும், பல ஆண்டுகளாக, பல தோபி காட்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தன. மேலும், மோசமான சுகாதாரம் மற்றும் சரியான வசதிகள் இல்லாததை எதிா்கொண்டன. இதனால், புதுப்பிக்க மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் எழுந்தன.

‘ஹுமாயூன் பாதையில் மேம்படுத்தல், நகரத்தில் ஒரு முக்கியமான சேவை சமூகத்தை உருவாக்கும் சலவைத் தொழிலாளா்களுக்கு சுகாதாரமான மற்றும் செயல்பாட்டு வசதிகளை வழங்கும் என்று ஒரு அதிகாரி கூறினாா்.

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

SCROLL FOR NEXT