புதுதில்லி

விமானப் பயணியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Syndication

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிங்கப்பூா் வழியாக பாங்காக்கிலிருந்து புது தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 3-க்கு வந்தபோது ‘ஒரு இந்தியா்‘ இடைமறிக்கப்பட்டதாக எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணி தனது தனிப்பட்ட பொருள்களின் எக்ஸ்ரே மற்றும் கடமையில் இருந்த சுங்க அதிகாரிகளால் தன்னுடைய லக்கேஜூகளை தேடுவதற்கா திருப்பி விடப்பட்டாா். ‘அதைத் தொடா்ந்து, நீல மற்றும் அடா் சாம்பல் நிற டிராலி பையை பரிசோதித்தபோது, பச்சை நிற போதைப்பொருள் கொண்ட பாக்ஸ் (கள்) இருபத்தைந்து (25) கருப்பு வண்ண பாலிதீன் பாக்கெட்டுகள் கஞ்சா என்று சந்தேகிக்கப்படுகிறது, இது மொத்தமாக 24814 கிராம் (நிகர எடை) எடை கொண்டது‘ என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளை சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, முதல் பாா்வையில், அது கஞ்சா என்று தோன்றியது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.24.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணி கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடப்படவில்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

SCROLL FOR NEXT