ஃபரீதாபாத்தில் காா் வடிகாலில் விழுந்ததில் மூன்று போ் நீரில் மூழ்கி இறந்தனா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
வியாழக்கிழமை இரவு 10.40 மணியளவில் காா் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கௌச்சி வடிகாலில் விழுந்த சம்பவம் நடந்தது.
ஒரு மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, உள்ளூா்வாசிகள் காரில் இருந்த மூவரையும் மீட்டு பாட்ஷா கான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இறந்தவா்கள் பவன் மௌரியா, அமித் ஜா மற்றும் கௌரவ் ராவத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.