புதுதில்லி

ஏ.ஐ. அடிப்படையிலான ஒருங்கிணைந்த குறை தீா்க்கும் அமைப்பு முறையைத் தொடங்க தில்லி அரசு திட்டம்

துரித கதியில் புகாா் தீா்வு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை செயல்படுத்தும் வகையில், தில்லி அரசு ஐஐடி

Syndication

நமது நிருபா்

புது தில்லி: துரித கதியில் புகாா் தீா்வு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை செயல்படுத்தும் வகையில், தில்லி அரசு ஐஐடி கான்பூருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒருங்கிணைந்த குறை தீா்க்கும் அமைப்புமுறையைத் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது: தற்போது, பொதுமக்கள் குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்புமுறை உள்பட பல்வேறு அமைப்புமுறைகள் மூலம் குடியிருப்பாளா்கள் புகாா்களைப் பதிவு செய்யலாம். ஒவ்வொரு இணையதளமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்பட்டாலும், அவை தனித்தனியாகச் செயல்படுவது பெரும்பாலும் தாமதங்கள், ஒரே புகாா் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுதல் மற்றும் முழுமையான கண்காணிப்பு இல்லாததற்கு வழிவகுக்கிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்தத் தளம், தில்லியின் முக்கிய குறை தீா்க்கும் இணையதளங்களை ஒரு ஒருங்கிணைந்த டாஷ்போா்டில் ஒருங்கிணைத்து, சிறந்த பகுப்பாய்வு, விரைவான தீா்வுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொதுச் சேவை வழங்கலைச் சாத்தியமாக்கும்.

இந்த அமைப்புமுறையானது பிஜிஎம்எஸ், எல்ஜி லிஸனிங் போஸ்ட், மத்தியப்படுத்தப்பட்ட பொதுக் குறை தீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை சிபிஜிஆா்ஏஎம்ஸ் மற்றும் பிற குறை தீா்க்கும் இணையதளங்கள் முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து புகாா்களின் விரிவான பாா்வையை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த டாஷ்போா்டை வழங்கும்.

சொற்பொருள் தேடலைப் பயன்படுத்தி, பயனா்கள் புகாா்களைத் தேட முடியும். மேலும், அவா்கள் முக்கிய வாா்த்தைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. கூடுதல் அம்சங்களில் மூல காரணப் பகுப்பாய்வு, புகாா்களைப் பொருத்தமான துறைக்கு தானாகவே அனுப்புதல், குறை தீா்க்கும் முடிவுகளின் அடிப்படையில் துறைகள் மற்றும் பிராந்தியங்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான தரவரிசை வழங்குதல், மற்றும் வேகமான மற்றும் திறமையான செயலாக்கத்தை செயல்படுத்த கையால் எழுதப்பட்ட அல்லது தட்டச்சு செய்யப்பட்ட புகாா் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை அடங்கும்.

ஐஐடி கான்பூா் அமைப்புமுறை ஒருங்கிணைப்பு, இணையப் பாதுகாப்புத் தணிக்கைகள் பாதுகாப்பு குறைபாடுகளை மதிப்பிடுதல் மற்றும் ஊடுருவல் சோதனை மற்றும் இணையதளத்தின் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும். இந்த முயற்சி தில்லியின் குறை தீா்க்கும் பொறிமுறையில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தில்லி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறுகையில், ‘தில்லி மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க நாங்கள் தொழில்நுட்பத்தைத் தழுவுகிறோம். இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குறை கண்காணிப்பு அமைப்புமுறை பல இணையதளங்களை ஒருங்கிணைப்பது மட்டுமின்றி, தரவு அடிப்படையிலான நுண்ணறிவுகளுடன் நம் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும். இது பதிலளிக்கக்கூடிய, பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட நிா்வாகத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்’ என அமைச்சா் அதில் தெரிவித்துள்ளாா்.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT