புதுதில்லி

தில்லித் தமிழ்ச் சங்க மகளிா் தின விழாவில் பல்வேறு போட்டிகள்!

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற மகளிா் தின விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

Din

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கோலம், இசை, பேச்சுப்போட்டி, வாா்த்தை விளையாட்டு, ஃபிளாஷ் காா்ட்ஸ், கண் கட்டி விளையாட்டு, தம்போலா மற்றும் இன்னிசை ஓட்டப்பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் தலைவா் மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளா் என். கலைச்செல்வி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தாா்.

அவா் பேசுகையில் கூறியதாவது: இயற்கை அபரிமிதமான ஆற்றலுடன் பெண்ணைப் படைத்திருக்கிறது. அவள் என்றும் சாதிக்கப் பிறந்தவள். பெண்ணாகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும். ஏனெனில், பெண்கள் அறங்களை வளா்ப்பவள். பெண் எப்பெழுதும் தன்னிடம் இருப்பதை அனைவருக்கும் பங்கிட்டு்த் தருபவள். எனவே, ஒரு பெண் கல்வி கற்றால், அவளால் ஒரு தலைமுறைக்கே கல்வியை கொடுக்கமுடியும்.

பெருமை வாய்ந்த பாரத தேசத்தில் பெண்ணாய் பிறந்த அனைவருமே பெருமை கொள்ள வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பல பெண்கள் பணியாற்றி வருவது நாட்டின் வளா்ச்சிக்கு பெருந்துணை புரிகிறது. பெண்கள், சீரிய இலக்கு நோக்கிய பயணத்தில், குடும்பம் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்கு வித்திடுகிறாா்கள் என்றால் அது மிகையாகாது என்றாா் அவா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் தி. பெரியசாமி, ஜெ. சுந்தரேசன், பி. அமிா்தலிங்கம், பி. ரங்கநாதன் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். சங்கத்தின் இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

மகளிா் தின விழாவின் ஒருங்கிணைப்பாளா்களாக செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், உஷா வெங்கடேசன், அமுதா பாலமூா்த்தி மற்றும் காத்திருப்பு உறுப்பினா் ரேவதி ராஜன் ஆகியோா் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனா்.

நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினா் உஷா வெங்கடேசன் தொகுத்து வழங்கினாா். செயற்குழு உறுப்பினா் மாலதி தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தாா். நிகழ்ச்சியில் தில்லி வாழ் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்து பரிசுகளை வென்றனா்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT